அதை நினச்சு பயப்படுறாங்க.. 10 வருடங்களாக ஐசிசி தொடரில் இந்தியாவின் தோல்வி பற்றி இயன் ஸ்மித்

Ian Smith 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றை கடந்து சூப்பர் 8 சுற்றில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இதுவரை தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியா கண்டிப்பாக செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.

ஆனால் அதன் பின் கண்டிப்பாக கோப்பையை வெல்வோம் என்ற உறுதியான நம்பிக்கை இந்திய ரசிகர்களிடமே இல்லை. ஏனெனில் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் இப்படி லீக் சுற்றில் அசத்தும் இந்தியா நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து வருகிறது. அதன் உச்சமாக கடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

தோல்வி பயம்:
இந்நிலையில் ஐசிசி தொடர்களில் கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தோல்வியை சந்தித்து விடுவோம் என்ற பயத்திலேயே இந்தியா தடுமாறுவதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் இந்தியா சந்திக்கும் தோல்விக்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விளையாட்டில் தோல்வி பயம் என்பது மிகப்பெரியது. அழுத்தம் என்பதும் பெரியது”

“பெரிய சந்தர்ப்பத்தை கையாள முடியும். அதாவது உலகில் எந்த அணியும் இந்திய அணியை போல் தங்கள் தோள்களில் அதிக அழுத்தத்துடன் விளையாடுவதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அவர்களுடைய மக்கள் தங்களுடைய அணி கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் தூங்குவதற்கு முன்பாக வெற்றியுடன் படுக்க விரும்புகின்றனர்”

- Advertisement -

“ஆனால் அதைத் தான் சமாளிப்பது மிகவும் கடினமாகும்” என்று கூறினார். அவர் கூறுவது போல நியூசிலாந்து நாடு மிகவும் குறைந்த மக்கள் தொகையை கொண்டது. மேலும் அங்கே கால்பந்து, ரஃக்பி போன்ற இதர விளையாட்டுகளும் பிரபலமாகும். ஆனால் இந்தியா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக திகழ்கிறது. அத்துடன் இங்கே கிரிக்கெட் என்பது உச்சகட்ட விளையாட்டாக கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க: இந்த விதிமுறையை மாத்துங்க.. உங்களால் தான் அவங்க காணாம போறாங்க.. ஐசிசி’யை விமர்சித்த கம்பீர்

அதனால் ஒவ்வொரு உலகக் கோப்பை துவங்கும் போதும் மற்ற நாடுகளை விட இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அதுவே இந்திய அணிக்கு எக்ஸ்ட்ரா அழுத்தத்தை கொடுக்கிறது என்று இயன் ஸ்மித் கூறியுள்ளார். எனவே இம்முறை அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement