கில்கிறிஸ்ட் மாதிரி டேஞ்சரான ரிஷப் பண்ட் அந்த 2 ஆர்டரிலும் கலக்குறாரு.. இயன் ஸ்மித் பாராட்டு

Ian SMith
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சூப்பர் 8 சுற்றில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். கார் விபத்தால் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்த அவர் 2024 ஐபிஎல் தொடரில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார்.

அதன் காரணமாக இந்த உலகக் கோப்பையில் தேர்வான அவர் பேட்டிங்க்கு சவாலான நியூயார்க் மைதானத்தில் 3 போட்டிகளில் 98 ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது பாகிஸ்தானுக்கு எதிராக 42 ரன்கள் அடித்த அவர் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினர்.

- Advertisement -

கில்கிறிஸ்ட் மாதிரி:
மேலும் விக்கெட் கீப்பராக இதுவரை அவர் 4 போட்டிகளில் 10 கேட்ச்கள் பிடித்துள்ளார். அதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் (9) சாதனையை உடைத்த அவர் புதிய உலக சாதனையும் படைத்தார். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அசத்தும் ரிஷப் பண்ட் வெள்ளைப்பந்து டாப் ஆர்டரில் அதிரடியாக விளையாடுவதாக முன்னாள் நியூசிலாந்து கேப்டன் இயன் ஸ்மித் பாராட்டியுள்ளார்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் போல ரிஷப் பண்ட் செயல்படுவதாக பாராட்டும் அவர் இது பற்றி பிடிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “விபத்தை சந்தித்ததிலிருந்து வலுவான கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஆக்ரோஷமாக விளையாடக் கூடிய அவர் ஆபத்தானவர். விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா உட்பட தமக்கு யார் ஆதரவு இருந்தாலும் அவர் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறார்”

- Advertisement -

“எனவே இந்திய அணியில் அவருக்கு நல்ல இடம் இருக்கிறது. ஏனெனில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உங்களுடைய சிறந்த வீரர்கள் அதிக பந்துகளை எதிர்கொள்வதற்கான வாய்ப்பை பெற வேண்டும் என்று நம்புகிறேன். அதுவே அவரை மதிப்பு மிக்கவராகவும் மாற்றுகிறது. தற்சமயத்தில் அவர் கேஎல் ராகுல் போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரரின் இடத்தை நிரப்பியுள்ளார்”

இதையும் படிங்க: நீங்க நெனைக்குற மாதிரி இது ஒன்னும் அவ்ளோ ஈஸி இல்ல.. புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்

“டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் டவுன் தி ஆர்டரில் விளையாடுகிறார். வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்கிறார். எனவே கில்கிறிஸ்ட் போன்ற ஒற்றுமை அவரிடம் இருக்கிறது. இதே போல தொடர்ந்து விளையாடினால் இன்னும் சில வருடங்களில் மக்கள் அனைவரும் கில்கிறிஸ்ட் – பண்ட் ஆகியோர் தரத்தில் நெருக்கமாக உள்ளனர் என்று சொல்வார்கள்” எனக் கூறினார்.

Advertisement