ரஹானேவை நீக்கிவிட்டு டெஸ்ட்டிலும் இவரை வைஸ் கேப்டன் ஆக்குங்கள் – இயான் சேப்பல் கருத்து

Chappell
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்க 5வது போட்டியில் கொரோனா அச்சம் காரணமாக ரத்தாகியது. இங்கிலாந்து தொடரில் இந்திய அணி நிச்சயம் அவர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

IND

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும், ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றிகளைத் தொடர்ந்து இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் அவர்களும் பாராட்டியுள்ளார். குறித்து அவர் கூறுகையில் :

விராட் கோலி தலைமையிலான இந்தியா அணி தற்போது மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அவர்கள் ஒரு சரியான அணியாகவே களமிறங்கி வருவதால் இது போன்ற வெற்றிகளை குவிக்க முடிகிறது. ஆஸ்திரேலிய தொடரில் தொடங்கி அடுத்ததாக இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடர், தற்போதைய இங்கிலாந்து தொடர் என அசைக்க முடியாத அணியாக இந்திய அணி திகழ்ந்து வருகிறது.

rohith 1

கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டு வரும் விராட் கோலி தலைமையிலான அணி இனியும் நிச்சயம் வெற்றிகளை குவிக்கும் என்று பாராட்டியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்திய அணியில் அஷ்வின் மற்றும் பாண்டியா ஆகியோரை இணைத்தால் இன்னும் அணியின் வலிமை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.

Rohith

அதுமட்டுமின்றி ரகானே-வின் இடம் கடினம் தான் என்றும் அவருக்கு பதிலாக துணை கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் கொடுக்கலாம் என்றும் கூறியுள்ளார். ரோகித் சர்மா அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் துணை கேப்டனாக செயல்படுவதில் திறமையானவர் என்றும் அதற்கான தகுதி அவரிடம் உள்ளது என்றும் இயான் சேப்பல் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement