கிரிக்கெட் வரலாற்றிலேயே நான் கண்ட பெஸ்ட் பினிஷெர் இவர்தான் – இந்திய வீரரை புகழ்ந்த மைக்கல் ஹஸ்ஸி

- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் தோனிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் சிறிது மாதங்கள் ஓய்வு எடுத்த தோனி மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதால் அவரது இடம் தற்போது இந்திய அணியில் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு மேலாக அவர் கிரிக்கெட் விளையாடுவதால் பிசிசிஐயின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலிலும் அவர் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் கிரிக்கெட் வாழ்க்கை தற்போது முற்றுப்புள்ளி அடைந்துவிட்டதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

dhoni

- Advertisement -

இந்நிலையில் தோனி தனது ஓய்வு குறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால் அவர் விரைவில் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்று பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் தோனியோ ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் தனது நிரூபித்து அணியில் இடம் பெறலாம் என்றும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் அணிக்கு மீண்டும் திரும்புவது மிகவும் சிக்கலாகி உள்ளது. இது குறித்து பல முன்னாள் வீரர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான மைக்கல் ஹஸ்ஸி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

தோனி குறித்த தன்னுடைய அனுபவங்களை கிரிக்இன்போ இணையதளத்திற்கு வீடியோகால் மூலம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் எடுத்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதில் : உலக கிரிக்கெட் வரலாற்றில் தோனி மட்டுமே சிறந்த பினிஷர் என்று கூறுவேன். என்னுடைய இந்த கருத்து சர்ச்சை ஏற்படுத்தலாம் ஆனால் கிரிக்கெட்டில் தோனிக்கு முன்பு கூட சிறந்த பினிஷர்கள் இருந்திருக்கலாம்.

- Advertisement -

ஆனால் தோனி அளவு அமைதியாக இருந்து மேட்சை பினிஷிங் செய்திருக்க மாட்டார்கள் மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய ஹஸ்ஸி : நான் பார்த்ததிலேயே தோனியிடம் இருக்கும் பவர் வேற எந்த வீரர்களிடமும் நான் கண்டதில்லை. எப்போது சிக்ஸ் அடிக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதை அவர் சரியாக செய்து முடிப்பார்.

Dhoni 1

தோனியிடம் இருக்கும் அமைதி மற்றும் அவரது மனோதிடம் ஆகியவை நினைத்துக்கூட பார்க்க முடியாதது. மேலும் தோனியிடம் இது போன்ற பல நல்ல அருமையான விஷயங்கள் உள்ளன அதனை நான் அவருடன் விளையாடிய காலத்தில் அனுபவித்துத் தெரிந்து கொண்டேன். அவர் எந்த விதத்திலும், எந்த ஒரு கட்டத்திலும் பதட்டம் அடையாமல் எதிரணியை கையாள்வார். அவர் பதட்டப்பட்டு நான் ஒரு முறை கூட பார்த்ததில்லை என்று ஹஸ்ஸி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement