போட்டியில் இல்லை..! ஆனாலும் சக வீரர்களுக்கு உதவிய தல தோனி ..! வியந்து போன ரசிகர்கள்..!

thala

இந்தியாவின் நட்சத்திர வீரரும் முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான தோனி, நேற்று நடந்த அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது சக வீரர்களின் கிட் பேக்கை சுமந்ததோடு, பேட்ஸ்மேன்களுக்கு தண்ணீர் கொண்டு வரும் வாட்டர் பாயாகவும் செயல்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
dhoni
இந்திய கிரிக்கெட் அணி இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஐயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தது. இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபரா வெற்றி பெற்று கோப்பையை கை பற்றியது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (ஜூன் 29) டப்லின் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐயர்லாந்து அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய வைத்தது. பின்னர் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து விளையாடிய ஐயர்லாந்து 12.3 ஓவரில் 70 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து. இதன் மூலம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
dhoni1
இந்த போட்டியில் தோனி, தவான் உள்ளிட்டோருக்கு ஒய்வு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பேட்ஸ்மேன்களின் கிட்பேக் சுமந்தபடி மைதானத்திற்குள் வந்த தோனி பேட்ஸ்மேன்களுக்கு தண்ணிர் கொண்டு வரும் வாட்டர் பாயாக செயல்பட்டார். பொதுவாக இந்த வேலைகளை அணியில் உள்ள இளம் வீரர்களோ அனுபவமில்லா வீரர்களோ தான் செய்வார்கள். ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தும் எந்த வித கௌரவத்தையும் பார்க்காமல் தோனி செய்த இந்த செயல் அனைவரயும் மெய்சிலிர்க்க வைத்தது.