ஸ்லிப்பில் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்த கிறிஸ் கெயில்..! – வீடியோ உள்ளே

gayle
Advertisement

கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வந்தது. கடந்த ஜூன் 28 ஆம் தேதி துவங்கிய இந்த தொடரில் 6 அணிகள் பங்குபெற்று விளையாடி வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் மேற்கிந்திய அணியின் கிரிஷ் கெயில் பிடித்த அற்புதமான கேட்ச் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.
chris-gayle
மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர என்றழைக்கப்படும் கிரிஷ் கெயில் இந்த தொடரில் வான்கூவர் நைட்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 15) நடந்த இந்த தொடரின் இறுதி போட்டியில் வான்கூவர் நைட்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் பி அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் பி அணி 17.4 ஓவர்கள் முடிவில் 145 ரன்களை எடுத்திருந்தது.

பின்னர் களமிறங்கிய கிரிஷ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணி 17.3 ஒவரில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் பி அணியின் கவம் ஹாட்ஜ் அடித்த பந்தை கிறிஸ் கெயில் பிரம்மிக்கத்தகுந்த வகையில் கேட்ச் செய்து அனைவரையும் அசத்தினார். 14-வது ஓவரில் பவாத் அகமது வீசிய பந்தை கவம் ஹாட்ஜ் ஸ்லிப் திசையில் அடிக்க முயன்றார்.


அப்போது ஸ்லிப்பில் நின்றுகொண்டிருந்த கெயில் சற்று டய்வ் செய்து கேட்ச் பிடிக்க முயன்றார். ஆனால், பந்து அவரது கை நழுவி போனது. கெயில் கேட்சை தவறவிட்டார் என்று நினைப்பதற்குள் நொடி பொழுதில் பந்தை வலது கையால் பிடித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். கெயிலின் இந்த அற்புதமான கேட்ச்சை கண்டு சக வீரர்கள் அனைவரும் பாராட்டினார்கள். தற்போது அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -
Advertisement