- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2024 டி20 உ.கோ இந்திய அணியுடன் பயணிக்காத விராட் கோலி.. பயிற்சி போட்டிக்கு சந்தேகம்.. காரணம் என்ன?

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே வெளியிடப்பட்டது. அந்த நிலையில் ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் கொல்கத்தா மற்றும் ஹைதெராபாத் அணிகளில் இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் விளையாட தேர்வான 15 வீரர்கள் யாருமே இடம் பெறவில்லை.

அதனால் உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக மே 25ஆம் தேதி இரவு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் முன்கூட்டியே தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் ஹர்திக் பாண்டியா, விராட் கோலி போன்ற சில வீரர்கள் மட்டும் அந்த அணியுடன் அமெரிக்காவுக்கு பயணிக்கவில்லை. குறிப்பாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி முதற்கட்ட இந்திய இந்திய அணியுடன் அமெரிக்காவுக்கு பயணிக்கவில்லை.

- Advertisement -

பயணிக்காத விராட் கோலி:
இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் சுமார் 2 மாதங்களாக விளையாடிய விராட் கோலி தற்காலிகமாக ஓய்வு கேட்டுள்ளதாக தெரிய வருகிறது. அதனால் அவருடைய விசாவை பிசிசிஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் மே 30ஆம் தேதி தான் இந்தியாவிலிருந்து விராட் கோலி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இது பற்றி பெயர் வெளியிட பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “இந்திய அணியுடன் கொஞ்சம் தாமதமாக இணைய உள்ளதாக விராட் கோலி எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்தார். அதனாலேயே பிசிசிஐ அவருடைய விசா நியமனத்தை பிந்தைய தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. அடுத்ததாக அவர் மே 30ஆம் தேதி அதிகாலை நியூயார்க் நகருக்கு செல்வார் என்று எதிர்பார்க்கிறோம். அவருடைய கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

அதே காரணத்தால் ஜூன் இரண்டாம் தேதி நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சி போட்டியை விராட் கோலி தவற விடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த தகவல் இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர் முன்கூட்டியே அமெரிக்காவுக்கு பயணித்து அங்குள்ள சூழ்நிலைகளை அறிவது இந்தியாவுக்கு நன்மையை கொடுக்கும்.

இதையும் படிங்க: இதுக்கு இந்தியாவே பரவால்ல.. சுமாரான பாகிஸ்தானுக்கு எதிரா விளையாடி பயனுமில்ல.. மைக்கேல் வாகன் அதிருப்தி

இருப்பினும் ஐபிஎல் 2024 தொடரில் 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ள அவர் தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கிறார். அத்துடன் நட்சத்திர வீரராக இருப்பதால் அவர் இப்படி ஓய்வெடுத்து பொறுமையாக செல்லும் முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா எப்போது அமெரிக்காவுக்கு செல்வார் என்பது தெரியாத தகவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -