டி20 உலககோப்பையை தெ.ஆ அணி தவறவிட கிளாஸன் செய்த இந்த ஒரு தவறு தான் காரணம் – விவரம் இதோ

Klassen
- Advertisement -

கடந்த ஜூன் 29-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்திய அணியின் வெற்றிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

அதேவேளையில் இதுவரை ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிக்கு முன்னேறாத தென்னாப்பிரிக்கா அணி எய்டன் மார்க்ரம் தலைமையில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால் நிச்சயம் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடினர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இந்த கடைசி போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை சந்தித்துள்ள வேளையில் அந்த தோல்வி எந்த இடத்தில் ஏற்பட்டது? என்பது குறித்து ரசிகர்களும், விமர்சகர்களும் தற்போது பேச துவங்கியுள்ளனர். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி வீரரான கிளாஸன் செய்த ஒரு சிறிய தவறுதான் அந்த அணி தோல்வியை சந்தித்தற்கு காரணம் என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்கள் சுட்டிக்காட்டியதாவது : தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியின் ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் எடுத்து தடுமாறினாலும் பின்னர் 15-வது ஓவர் வரை சிறப்பாக ஆதிக்கம் செலுத்தினர். குறிப்பாக 15 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த அந்த அணி 151 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் மில்லர் மற்றும் கிளாஸன் ஆகியோர் களத்தில் இருந்ததால் அந்த அணி எளிதில் இலக்கை எட்டிப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் அப்போது 27 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் என 52 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஹென்றிச் கிளாஸன் ஆட்டமிழந்தார். இந்த போட்டியின் மிடில் ஓவர்களிலேயே அவர்கள் அதிரடியாக விளையாடிவிட்டதால் 30 பந்துகளில் 30 ரன்கள் எளிதாக அடித்து விடலாம் என்பது போன்று வெற்றிக்கு முன்கூட்டியே கிளாசன் மிகுந்த தன்னம்பிக்கையோடு இருந்தார்.

இதையும் படிங்க : அவர் லெஜெண்ட்.. பாபர் அசாம் மட்டுமல்ல யாரையும் கம்பேர் பண்ணாதீங்க.. பாக் ரசிகர்களை சாடிய ஷேஷாத்

அந்த நேரத்தில் தான் ஹர்திக் பாண்டியா அவரது விக்கெட்டை வீழ்த்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அழுத்தம் ஏற்பட்டு இறுதியில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், பாண்டியா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் அவர்கள் முற்றிலுமாக அடங்கிப் போகினர். கிளாஸன் மட்டும் அந்த இடத்தில் விக்கெட்டை இழக்காமல் சற்று நிதானித்திருந்தால் தென்னாப்பிரிக்க அணி முன்கூட்டியே இந்த போட்டியில் வெற்றியைக் கூட பெற்றிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement