தொடர் துவங்கும் முன்னரே அணியில் இருந்து வெளியேறிய சி.எஸ்.கே அணியின் வேகப்பந்து வீச்சாளர் – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடையே இந்த தொடர்பு பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ipl

- Advertisement -

கடந்த வருடம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணி மீண்டும் தற்போது பலமாக திரும்ப வேண்டும் என்பதனால் பல மாற்றங்களுடன் தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் இந்த முறை கோப்பையை வென்று தீரவேண்டும் என்றும் சிஎஸ்கே அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

தோனியின் தலைமையிலான சிஎஸ்கே அணிகள் பல புதுமுக வீரர்கள் இணைந்துள்ள வேளையில் தற்போது அணியில் உள்ள அனுபவம் வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த ஹேசல்வுட் வெளியேறி இருக்கிறார். தனது வெளியேற்றம் குறித்து பேசி உள்ள ஹேசல்வுட் கூறுகையில் :

hazlewood

நான் கடந்த 10 மாதங்களாக பயோபபுள் மற்றும் குவாரன்டைனில் இருந்து வருகிறேன். இதனால் எனக்கு இரண்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு தேவை. இந்த ஓய்வு நேரத்தை என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் செலவிட விரும்புகிறேன். இந்த தொடருக்கு பிறகு நாங்கள் டி20 உலகக் கோப்பை தொடரிலும் விளையாட வேண்டும். எனவே தொடர்ந்து பயோ பபுளில் இருப்பது மிகவும் கஷ்டம்.

hazlewood 1

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நான் தயாராக இருக்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரின்போது 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ஹேசல்வுட் கடந்த ஆண்டு 3 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். அவர் வெளியேறினாலும் சிஎஸ்கே அணியில் ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், டுவைன் பிராவோ, டேரன் பிராவோ, லுங்கி இங்கிடி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement