டி20 உலககோப்பைக்கு தயாராகும் வகையில் பாண்டியா எடுத்த ஸ்பெஷல் பயிற்சி – ரோஹித் மற்றும் டிராவிட் கொடுத்த டிரில்

Hardik
- Advertisement -

ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அந்த தொடரில் மொத்தமாக 14 போட்டியில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 10 போட்டிகளில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தினை பிடித்து வெளியேறியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த மோசமான செயல்பாடு அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது பாண்டியா கழட்டிவிடப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்று பேசப்பட்ட வேளையில் ஹார்டிக் பாண்டியாவின் மீது நம்பிக்கை வைத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அவருக்கு துணை கேப்டன் பதவியையும் வழங்கியது.

- Advertisement -

ரோகித் சர்மா கேப்டனாகவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அந்த செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து ஜூன் 2-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக் கோப்பை தொடரானது ஜூன் 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்வேளையில் இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுடன் இடம் பிடித்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தாங்கள் விளையாடும் முதல் போட்டியில் ஜூன் 5-ஆம் தேதி அயர்லாந்தை நியூயார்க் நகரில் எதிர்கொள்ள உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் வேளையில் துணைக் கேப்டனான பாண்டியா மும்முரமான பயிற்சியை எடுத்து வருவதாகவும் அவருக்கு நேரடியாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் டிராவிட் ஆகியோர் முறையான பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த பயிற்சியில் முறையாக கலந்து கொண்ட பாண்டிய 40 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக பந்துவீசி ஸ்பெஷல் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.

இதையும் படிங்க : இம்பேக்ட் பிளேயர் நல்லாருக்கு.. ஆனா இந்த 2 மாற்றத்தை செஞ்சுட்டு யூஸ் பண்ணலாம்.. தாதா கங்குலி கருத்து

மிகத் திறமை வாய்ந்த ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் பாண்டியாவின் பந்துவீச்சு இந்திய அணிக்கு அவசியம் என்று பார்க்கப்படும் நேரத்தில் வலைப்பயிற்சியின் போது பந்துவீச்சில் அதிக நேரம் பயிற்சி எடுத்த பாண்டியா பேட்டிங்கிலும் போதுமான அளவு பயிற்சி எடுத்ததோடு பேட்டிங் பேச்சாளர் விக்ரம் ரத்தோருவுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Advertisement