- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வெற்றிக்கு காரணம் அவங்க தான்.. 6 மாசம் எல்லாரும் கிண்டலடிச்சாங்க.. பாண்டியா கண்ணீர் மல்க பேட்டி

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி புதிய சாம்பியனாக சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் ஆரம்பம் முதலே எதிரணிகளை சொல்லி அடித்து வந்த இந்தியா மாபெரும் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பார்படாஸ் நகரில் ஜூன் 29ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 76, அக்சர் பட்டேல் 47, துபே 27 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வந்த தோல்வியை உடைத்து சரித்திரம் படைத்தது.

- Advertisement -

பாண்டியா உருக்கம்:
இந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றிய நிலையில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்திற்காகவும் 2024 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டதாலும் பலரும் தம்மை கிண்டலடித்ததாக ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இருப்பினும் அப்போதெல்லாம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று தெரிவிக்கும் அவர் வெற்றிக்கு பவுலர்கள் முக்கிய காரணம் என்று கூறினார்.

இது பற்றி கோப்பை வென்றதும் கண்ணீர் மல்க அவர் பேசியது பின்வருமாறு. “மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறது. இதற்காக நாங்கள் கடினமாக உழைத்தோம். சில நேரங்களில் அது கிளிக் ஆகாது. ஆனால் மொத்த தேசமும் விரும்பியதை இன்று நாங்கள் சாதித்துள்ளோம். எனக்கு இன்னும் இது அதிக ஸ்பெஷலானது. ஏனெனில் கடந்த 6 மாதங்களாக எனக்கு மோசமாக சென்றது. அப்போது நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை”

- Advertisement -

“இருப்பினும் கடினமாக உழைத்தால் என்னால் ஜொலிக்க முடியும் என்பது எனக்குத் தெரியும். இது போன்ற வாய்ப்புகள் தான் ஸ்பெஷலாக்குகிறது. எங்களுடைய திட்டத்தை செயல்படுத்தி அமைதியாக இருந்து அழுத்தத்தை எதிரணி பக்கம் கொண்டு சென்றால் சாதிக்க முடியும் என்று நாங்கள் நம்பினோம். பும்ரா மற்றும் மற்ற பவுலர்களுக்கு வெற்றிக்கான பாராட்டுக்கள். கடைசி 5 ஓவர்கள் தான் முக்கியம்”

இதையும் படிங்க: என்னோட இதயத்தையே எகிற வெச்சுட்டீங்களேப்பா.. பிறந்தநாள் பரிசுக்கு நன்றி.. இந்திய அணியை வாழ்த்திய தோனி

“நான் அமைதியாக இல்லையென்றால் அது உதவாது என்பது எனக்கு தெரியும். ஒவ்வொரு பந்திலும் 100% கமிட்டாக விரும்பினேன். ராகுல் டிராவிட்டுகாக மகிழ்ச்சி. அற்புதமான மனிதரான அவருடன் வேலை செய்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு நாங்கள் அற்புதமான வழியனுப்புதலை செய்துள்ளோம். நாங்கள் நல்ல நண்பர்கள். அனைத்து துணை பயிற்சிகளுக்காகவும் மகிழ்ச்சியாடைகிறேன்” என்று கூறினார்.

- Advertisement -