தோனி, கோலி, ரோஹித் மாதிரி என்னோட கேப்டன்ஷிப்பும் பிரமாதமாக இருக்கும் – கெத்தாக கூறும் புதிய கேப்டன்

Pandya
- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசனுக்கான வீரர்களின் மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளதால் இந்த ஏலத்துக்காக ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் ஒவ்வொரு அணியாகவும் விளையாட இருக்கின்றனர்.

IPL
IPL Cup

முன்னதாக இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 நகரங்களை மையமாக கொண்ட புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணமாகவே இந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் சிறிய அளவில் அல்லாமல் மெகா அளவில் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக இந்த 2 அணிகளும் தாங்கள் விரும்பிய 3 வீரர்களை அதிகபட்சமாக தேர்வு செய்து கொண்டு அதற்கான விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

- Advertisement -

கேப்டன் ஹர்டிக் பாண்டியா:
அந்த வகையில் ரூபாய் 5625 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள அகமதாபாத் அணி தாங்கள் விரும்பிய ஹர்டிக் பாண்டியா, ரசித் கான், சுப்மன் கில் ஆகிய 3 வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதில் தங்கள் சொந்த மாநிலமான குஜராத்தை சேர்ந்த இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணியின் கேப்டனாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

pandya

கடந்த சீசன்களில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய முதுகெலும்பு வீரராக ஹர்திக் பாண்டியா விளையாடி வந்தார். இருப்பினும் அவரை அந்த அணி நிர்வாகம் தக்க வைக்காத காரணத்தால் அகமதாபாத் அணி அவரை 15 கோடிகளுக்கு வாங்கி கேப்டனாக நியமனம் செய்துள்ளது.

- Advertisement -

அனுபமில்லாத கேப்டன்:
இதற்கு முன் அண்டர் 16 அளவில் அதுவும் குறுகிய காலம் கேப்டனாக பணியாற்றியுள்ள ஹர்திக் பாண்டியா முதல் தர கிரிக்கெட்டில் ஒருமுறைகூட கேப்டனாக செயல்பட்டது கிடையாது. எனவே அனுபவமே இல்லாத ஒரு பதவியில் முதல் முறையாக செயல்படுவது பற்றி அவர் கூறியது பின்வருமாறு. “நான் ஒரு எடுத்துக்காட்டை தருவேன். ஒருவர் உயரத்தில் இருக்கும்போது ​​​​எல்லாமே சரியான இடத்தில் விழும்போது ​​​​அவருக்கு உண்மையாக யாரும் தேவையில்லை. அவர் நல்ல இடத்தில் இருந்தால் யாரும் தேவையில்லை. ஒருவருக்கு மோசமான நாள் அமைந்தால் அப்போது அவருக்கு நான் தேவை என்பதை நம்புகிறேன். யாராவது நன்றாக செய்தால் நான் அவரைத் தொந்தரவு செய்யமாட்டேன். ஆனால் அவர் கீழே இருக்கும்போது ​​​​ஒரு நபராக அவருக்கு உதவ நான் தேவைப்பட்டால் நான் எப்போதும் அங்கே இருப்பேன் என்பதே எனது கொள்கையாகும். அதைத்தான் நான் பின்பற்ற விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

தமது அணியில் சிறப்பாக செயல்படும் யாரையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதுடன் எப்போதாவது தனது அணியில் உள்ள ஒரு சில வீரர்களுக்கு மோசமான நாள் அமைந்தால் அந்த நேரம் அவர்களுக்கு ஆதரவாக இருப்பதே தமது கேப்டன்ஷிப் ஸ்டைலாக இருக்கும் என ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கேப்டனாக பாரபட்சம் இல்லாமல் தனது ஆதரவு எப்பொழுதும் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி, கோலி, ரோஹித் வழியில்:
“விராட் கோலியிடம் இருந்து ஆக்ரோஷம் மற்றும் ஆர்வத்தை எடுத்துக்கொள்வேன். அவரின் எனர்ஜி மிகவும் அபாரமானதாகும். அதேபோல் ஒவ்வொரு தருணங்களிலும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பதை தோனியிடம் பார்த்துள்ளேன். மேலும் ஒரு வீரர் என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை அவர்களே எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை ரோகித் ஷர்மாவிடம் இருந்து கற்றுள்ளேன். எனவே இந்த 3 தகுதிகளையும் நான் எடுத்து கொண்டால் அது ஒரு மிகச்சிறந்த சேர்க்கையாக இருக்கும்” என இதுபற்றி ஹர்திக் பாண்டியா மேலும் தெரிவித்துள்ளார்.

pandya

நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன்களாக கருதப்படும் எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரிடம் அவர்களின் சிறந்த தலைமைப் பண்புகளையும் ஒரு சேர எடுத்துக்கொண்டு கேப்டன்ஷிப் செய்யவுள்ளதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய கிரிக்கெட்டில் காலடி வைத்த ஹர்திக் பாண்டியா அதன்பின் விராட் கோலியின் தலைமையில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடி ஒரு நட்சத்திர ஆல்ரவுண்டராக உருவெடுத்தார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய அவர் அந்த அணியின் பல வெற்றிகளில் பங்காற்றி 3 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

“புதிய பொறுப்பில் என்னை நானே சோதித்துக்கொள்ள ஐபிஎல் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது. கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்ற எதிர்பார்ப்பு இல்லை ஆனால் ஒவ்வொருவரும் வெற்றி பெறவே விரும்புவார்கள். இதன் வாயிலாக நமது நாட்டின் கேப்டன்ஷிப் கூட கிடைக்கலாம். ஆனால் நான் அதை எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அது என்னை வந்து சேருமானால் அது தாமாகவே வந்து சேரும்” என இது பற்றி மேலும் தெரிவித்துள்ள ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வரும் காலங்களில் இந்தியாவிற்கு கேப்டனாகும் தகுதியை வளர்த்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisement