ஹார்டிக் பாண்டியாவை டி20 உலகக்கோப்பை அணியில் சேத்ததே இதுக்காகத்தான் – அவரும் ஓகே சொல்லிட்டாரு

Pandya
Pandya IND
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா முதுகுப் பகுதியில் செய்துகொண்ட ஆபரேஷனுக்கு பிறகு தொடர்ந்து பந்து வீசாமல் இருந்து வந்தார். ஆனாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி வரும் அவரை இந்திய அணி தொடர்ந்து ஆதரித்து வருகிறது. இருப்பினும் அவர் தொடர்ச்சியாக பந்துவீசாத காரணத்தினால் தற்போது நடைபெற்ற இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறவில்லை.

- Advertisement -

இருப்பினும் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரராக இந்திய அணியில் விளையாடி வருகிறார். மேலும் அவர் பந்து வீசாமல் இருந்தால் நிச்சயம் அவருக்கு பதிலாக வேறொரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரை தேடும் பணியில் இந்திய அணி நிர்வாகம் இறங்கும் என்பதனால் தற்போது ஹார்டிக் பாண்டியா மெல்ல மெல்ல பந்து வீசுகிறார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் கூட பந்து வீசிய பாண்டியா நிச்சயம் தொடர்ந்து பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ஹார்டிக் பாண்டியா தேர்வாகி இருந்தார். அதுமட்டுமின்றி இந்த உலக கோப்பை தொடரில் பாண்டியா பந்து வீசுவதாக தெரிவித்துள்ளார் என்பதனால் அவரை முதன்மை ஆல்-ரவுண்டராக அணியில் சேர்த்துள்ளோம் என தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

pandya 1

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹார்டிக் பாண்டியா மீண்டும் பந்து வீசுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார் அவரது இந்த முடிவை எங்களிடம் அவர் கூறிவிட்டார். இதன் காரணமாகவே அவரை டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வு செய்தோம் என சேத்தன் சர்மா கூறினார்.

அது மட்டுமின்றி இந்திய அணியில் ஜடேஜா, அக்ஷர் பட்டேல், ஹார்திக் பாண்டியா ஆகிய 3 பேரை ஆல்ரவுண்டராக தேர்வு செய்துள்ளோம் என்றும் அதில் எப்பொழுதும் அணியின் முதன்மையான ஆல்ரவுண்டராக ஹார்டிக் பாண்டியா விளையாடுவார் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement