- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எவ்ளோ சொல்லியும் கேட்காத பாண்டியா. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பரிதாபம் – காரணம் இதுதான்

இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் நகரில் வரும் ஜூன் 18ஆம் தேதி துவங்க இருக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த ஹர்டிக் பாண்டியாவின் பெயர் அணியில் இடம்பெறவில்லை.

இப்படி ஹர்டிக் பாண்டியா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட சில முக்கிய காரணங்கள் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளன. அதன்படி கடந்த உலக கோப்பை தொடரின் போது இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை கொடுத்த ஹர்திக் பாண்டியா அதன்பிறகு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அந்த சிகிச்சைக்குப் பிறகு 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் அவர் பந்து வீசாமல் இருந்தார்.

- Advertisement -

அதன் பிறகு தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நடைபெற்ற தொடரில் சில ஓவர்கள் வீசிய பாண்டியா மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் இப்போது தற்போது நடைபெற்று நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் என தொடர்ந்து பந்து வீசாமல் இருந்தார். இது தேர்வாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் டெஸ்ட் அணியை பொறுத்தவரைக்கும் பாண்டியா ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக செயல்பட முடியாது என்றும் அவர் பந்து வீசினால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கருதப்பட்டது.

ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி பந்துவீசும் அளவிற்கு ஃபிட்டாக இல்லை இதன் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் ஒருவேளை பாண்டியா பந்துவீசி தனது உடல் தகுதியை நிரூபித்து இருந்தால் நிச்சயம் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வாகி இருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

ஆனால் தனது பந்துவீச்சை நிறுத்திய பாண்டியாவுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது அவருக்கு ஏமாற்றமாகவே அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் ஆல்-ரவுண்டராக மட்டுமே அவர் டெஸ்ட் அணியில் தேர்வாக முடியும் என்றும் அவரை ஒரு முழுநேர பேட்ஸ்மேனாக அணியில் தேர்வு செய்ய முடியாது என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by