- Advertisement -
ஐ.பி.எல்

லக்னோ போட்டியில் விதிமுறையை மீறிய ஹர்டிக் பாண்டியாவால்.. மொத்தமாக தண்டிக்கப்பட்ட மும்பை அணி

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற 48வது லீக் போட்டியில் மும்பையை 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 5வது வெற்றியை பதிவு செய்த லக்னோ புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியது. லக்னோவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை வெறும் 145 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக நேஹல் வதேரா 46, டிம் டேவிட் 35*, இஷான் கிசான் 32 ரன்கள் எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக மோசின் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த லக்னோ அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கே.எல் ராகுல் 28, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 62 ரன்கள் எடுத்து 19.2 ஓவரில் எளிதாக வெற்றி பெற வைத்தார்கள். அதனால் மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

மொத்த அணிக்கும்:
இதையும் சேர்த்து 10 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை 3 வெற்றியும் 7 தோல்விகளையும் பதிவு செய்தது. அதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் தவிக்கும் மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது. ஏனெனில் அடுத்த 4 போட்டிகளில் வென்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 50% மட்டுமே வாய்ப்புள்ளது.

இந்நிலையில் லக்னோவுக்கு எதிரான இந்தப் போட்டியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது. எனவே நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கத் தவறிய விதிமுறையை மீறிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த போட்டிக்கான சம்பளத்திலிருந்து 24 லட்சம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஏற்கனவே இந்த வருடம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. அதனால் ஏற்கனவே பாண்டியாவுக்கு மட்டும் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 2வது முறையாக அந்தத் தவறை செய்துள்ளதால் பாண்டியாவுக்கு 24 லட்சம் அபராதமும் இம்பேக்ட் வீரர் உள்ளிட்ட எஞ்சிய 11 மும்பை வீரர்களுக்கு தலா 6 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: இப்படி ஆடுனா அவுட் ஆகாம.. வேற என்ன ஆகும்? தோல்விக்கு பிறகும் கொஞ்சமும் மாறாமல் – திமிருடன் பாண்டியா பேட்டி

அந்த வகையில் 2வது முறையாக பவுலர்களை வேகமாக பயன்படுத்த தவறிய பாண்டியா செய்த தவறால் மொத்த மும்பை அணிக்கும் அபராதம் விதிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மும்பை தங்களுடைய அடுத்த போட்டியில் மே மூன்றாம் தேதி கொல்கத்தாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -