மெர்சல் பாடல் வரிகளோடு சி.எஸ்.கே-வுக்கு என்ட்ரி கொடுக்கும் ஹர்பஜன்

harbhajan

10 ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல்-லின் மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்கியுள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை எடுத்துள்ளது. இது குறித்து அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

IPL

ஹர்பஜன் சிங் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் `வணக்கம் தமிழ்நாடு உங்க கூட இனி கிரிக்கெட் ஆடப்போறது ரொம்ப சந்தோஷம். உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்கமுன்னு’ என்று `மெர்சல்’ படத்தின் பாடல் வரியைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார்.

- Advertisement -

Source: Vikatan

Advertisement