அஷ்வினுக்கு இடம் கொடுக்காதது சரிதான். ஏன் தெரியுமா ? – ஹர்பஜன் கொடுத்த விளக்கம்

Ashwin-Harbhajan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நேற்று ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய விவாதத்தை எழுப்பி உள்ளது.

Kohli

- Advertisement -

மேலும் பலர் அஸ்வினுக்கு இடம் கொடுக்காதது கோலி செய்த தவறு என்று சுட்டிக் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அஸ்வின் இந்திய அணியில் விளையாடாதது சரியான முடிவுதான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம்.

இதன் காரணமாக இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கும் ஸ்பின்னர்கள் என்பது தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன். ஆட்டம் செல்ல செல்ல ஸ்பின்னர்களுக்கு மைதானம் கை கொடுத்தாலும் சில ஓவர்கள் மட்டுமே இந்த மைதானத்தில் அவர்கள் வீச முடியும். நேற்றைய போட்டியில் கூட முதல் 50 ஓவர்களில் ஜடேஜா 3 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

Jadeja

அந்த அளவிற்கு ஸ்பின்னிற்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அஸ்வின் சேர்க்கப்படாதது சரிதான் ஏனெனில் பந்துவீச்சு முடிந்து பேட்டிங் செய்ய வரும்போது நிச்சயம் ஜடேஜா அஸ்வினை விட சற்று சிறப்பாக பேட்டிங் செய்து அணிக்கு பங்கு அளிப்பார் என்று கருதுகிறேன்.

jadeja 2

இதன் காரணமாக இந்திய அணி எடுத்துள்ள இந்த முடிவு சரியானது என ஹர்பஜன்சிங் தெரிவித்துள்ளார். அவர் இப்படி கருத்து தெரிவித்து இருந்தாலும் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை போட்டியின்போது சதமடித்து அசத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement