ஆஸி கிடையாது.. சூப்பர் 8இல் அந்த டீம் இந்தியாவை தோற்கடிக்கலாம்.. எச்சரிக்கையா இருங்க.. ஹர்பஜன் பேட்டி

Harbhajan Singh 3
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்து நிறைவு பெற்றுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 20ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 22ஆம் தேதி வங்கதேசம் அணியையும் ஜூன் 24ஆம் தேதி ஆஸ்திரேலியா அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது.

அதன் பின் நடைபெறும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற இந்த சூப்பர் 8 சுற்றில் குறைந்தது 2 வெற்றிகளை நல்ல ரன்ரேட்டுடன் பதிவு செய்ய வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியா இம்முறையும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எச்சரித்த ஹர்பஜன்:
எனவே ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளை தோற்கடித்து இந்தியா எளிதாக செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை விட ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று ஹர்பஜன் சிங் எச்சரித்துள்ளார். அதற்கான காரணம் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஆப்கானிஸ்தான் மிகவும் நல்ல அணி. குறுகிய காலத்தில் அவர்களுடைய வளர்ச்சி அற்புதமாக இருக்கிறது. அவர்களிடம் ரஷித் கான் முகமது நபி உள்ளனர். இந்தத் தொடரில் அவர்களிடம் தான் சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். பேட்டிங் துறையும் நன்றாக இருக்கிறது. அவர்கள் அதிர்ஷ்டத்தால் எதையும் விளையாடவில்லை. அவர்களிடம் தற்போது 2023 உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவமும் இருக்கிறது”

- Advertisement -

“உலகக் கோப்பையில் அவர்கள் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவை தோற்கடித்தனர். எனவே எந்த பெரிய அணியையும் தோற்கடிக்கும் பலம் ஆப்கானிஸ்தானிடம் இருக்கிறது. அதனால் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஏனெனில் டாஸ் வென்றால் சில விஷயங்கள் அவர்களுக்கு சாதகமாக செல்லலாம். எனவே அந்தப் போட்டி இந்தியாவுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்” என்று கூறினார்.

இதையும் படிங்க: வந்தது 3000 விண்ணப்பம்.. ஆனா கம்பீருக்கு மட்டும் அழைப்பு விடுத்த பி.சி.சி.ஐ – என்ன நடந்தது?

அவர் கூறுவது போல சமீப காலங்களாகவே ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய எழுச்சி கண்டுள்ளது. சொல்லப்போனால் இந்தியாவுக்கு காலம் காலமாக சவாலை கொடுத்து வரும் நியூசிலாந்தை இந்த டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக தோற்கடித்த ஆப்கானிஸ்தான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. எனவே ஆப்கானிஸ்தானை இனிமேலும் கத்துக்குட்டியாக குறைத்து எடை போடாமல் கவனத்துடன் இந்தியா விளையாடுவது வெற்றிக்கு அவசியமாகிறது.

Advertisement