டி20க்கு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் கோச்சா? டிராவிட்க்கு பதில் அவரை புதிய கோச்சா போடுங்க – ஹர்பஜன் கோரிக்கை

Harbhajan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இந்த தொடரில் சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா வழக்கம் போல இங்கிலாந்துக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் 1 விக்கெட் கூட எடுக்காமல் படுதோல்வி சந்தித்து வெளியேறியது. இத்தனைக்கும் இதர அணிகளை விட உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்தும் இப்படியொரு மோசமான தோல்வியை சந்தித்துள்ளதால் நிறைய விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

dravid

- Advertisement -

குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியத்துடன் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதை விட கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக செய்த தேவையற்ற மாற்றங்கள் ஏற்கனவே அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது.

கோச்ச மாத்துங்க:

இருப்பினும் உலக கோப்பைக்கு தேவையான தரமான வீரர்களை கண்டறிவதற்காக மாற்றங்கள் செய்யப்படுவதாக அவரும் ரோகித் சர்மாவும் தெரிவித்ததால் அனைவரும் அமைதியாக இருந்தனர். ஆனால் இறுதியில் எந்த மாற்றமும் பயனளிக்காத வகையில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளதால் சீனியர் வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்குமாறு கோரிக்கைகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் சீனியர் வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

nehra 1

குறிப்பாக டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் அவருக்கு பதிலாக விரைவில் நிரந்தர டி20 கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் ஹர்திக் பாண்டியாவுடன் ஏற்கனவே இணைந்து செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் இந்திய தலைமைப் பயிற்சியாளராக சாதனை படைத்துள்ள ஆஷிஷ் நெஹ்ரா டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு சிறந்த பயிற்சியாளராக செயல்படுவார் என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “கேப்டன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை நீங்கள் பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்”

- Advertisement -

“நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அவரிடம் கிரிக்கெட்டின் அபாரமான மூளை உள்ளது. ஆனால் ஒருவேளை அவரை நீங்கள் டி20 கிரிக்கெட்டின் பயிற்சிளராக நீக்காமல் போனால் குறைந்தபட்சம் அவருக்கு உதவி செய்வதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை தேர்வு செய்யுங்கள். அதிலும் ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். விரைவில் நீங்கள் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை வைத்திருப்பதால் அவர் இந்த நிலைமையில் சரியாக பொருந்தவர்”

Harbhajan

“அவரில்லை என்றாலும் சமீபத்தில் ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள். மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவரை விட சிறந்த தேர்வு யாரும் இருக்க முடியாது. டி20 அணியின் சிறந்த வீரரான அவரைப் போன்ற நிறைய பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல ராகுல் டிராவிட் அணுகுமுறை மிகவும் பழையது போல் காட்சியளிப்பதால் 2017இல் ஓய்வு பெற்று ஏற்கனவே பாண்டியாவுடன் இணைந்து செயல்பட்டுள்ள ஆசிஷ் நெஹ்ரா சிறந்த தேர்வாக இருப்பார். அதிலும் இந்த வருட ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் இளம் வீரர்களைக் கொண்ட குஜராத் அணியில் லேப்டாப் போன்ற டெக்னாலஜிகளை பயன்படுத்தாமல் சாதாரண பேப்பரில் பிளான் போட்டு “சீக்கிரமாக தூங்குங்கள் அப்போதுதான் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்” என்று வீரர்களிடம் சகஜமாக பழகிய அவருடைய கோச்சிங் அனைவரது பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement