குப்பை மாதிரி பேசாதீங்க.. அது இங்கிலாந்துக்கு சாதகமா இல்லயா? மைக்கேல் வாகனை விளாசிய அஸ்வின், ஹர்பஜன்

- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. ஜூன் 27ஆம் தேதி நடைபெற்ற செமி ஃபைனலில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெளியேற்றிய இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஜூன் 29ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணியை இந்தியா சந்திக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 57, சூரியகுமார் 47 ரன்கள் எடுத்த உதவியுடன் 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய இங்கிலாந்து சுமாராக விளையாடிய 103 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

குப்பை பேச்சு:
முன்னதாக ஆப்கானிஸ்தானை 59 ரன்களுக்கு சுருட்டி எளிதாக தென்னாப்பிரிக்கா வென்ற முதல் செமி ஃபைனல் நடைபெற்ற ட்ரினிடாட் நகரில் இந்தியா – இங்கிலாந்து போட்டி நடைபெற்றிருக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்தார். ஆனால் அப்போட்டியை இந்தியாவுக்காக கயானா நகரில் நடத்தும் ஐசிசி மற்ற அணிகளுக்கு அநியாயத்தை நிகழ்த்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில் இந்தியா வென்ற பின் அவர் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்தியா ஃபைனலுக்கு சென்றுள்ளது. இந்த தொடரில் அவர்கள் இதுவரை சிறந்த அணி. இந்த பிட்ச்சில் அவர்கள் இங்கிலாந்தின் மீது மிகவும் கடினமாக சென்றனர். மெதுவான சுழலுக்கு சாதகமான பிட்ச்களில் எப்போதும் இந்தியா சிறந்த அணி. ஒருவேளை இப்போட்டி ட்ரினிடாட் நகரில் நடைபெற்றிருந்தால் இங்கிலாந்து வென்றிருக்கும் என்று நான் நம்புகிறேன்”

- Advertisement -

“இருப்பினும் லீக் சுற்றில் அவர்கள் தென்னாப்பிரிக்காவிடம் தோற்றதால் எந்த புகாரும் இல்லை. ஆனால் கயானா இந்தியா தேர்வு செய்வதற்கு நல்ல மைதானம்” என்று கூறியுள்ளார். அதை பார்த்த ஹர்பஜன் சிங் அவருக்கு பதிலடி கொடுத்துள்ளது பின்வருமாறு. “கயானா இந்தியாவுக்கு நல்ல மைதானம் என்று எதை வைத்து நீங்கள் சிந்திக்கிறீர்கள்? இரு அணிகளும் ஒரே மைதானத்தில் தான் விளையாடினேன்”

இதையும் படிங்க: மழை வந்தும் இப்படியா? உண்மையிலே அவங்க அதுக்கு தகுதியானவங்க.. இந்திய அணியை பாராட்டிய – ஜாஸ் பட்லர்

“சொல்லப்போனால் அங்கே டாஸ் வென்றது இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்தது. எனவே சில்லியாக பேசுவதை நிறுத்துங்கள். அனைத்து துறைகளிலும் இங்கிலாந்தை இந்தியா தோற்கடித்துள்ளது. எனவே உண்மையை ஒப்புக்கொண்டு இந்த குப்பையான பேச்சை உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். லாஜிக் இல்லாமல் நான்சென்ஸ் போல் பேசாதீர்கள்” என்று கூறினார். அதே போல அவருக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் கடினமான கணக்கு சமன்பாட்டை பதிவிட்டு இந்தியா வென்றதாக ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement