அரையிறுதி போட்டியில் வென்று இறுதிப்போட்டியில் மோதப்போகும் 2 அணிகள் இவைதான் – விவரம் இதோ

Harbhajan
- Advertisement -

2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடிய இந்த தொடரில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின. அதனை தொடர்ந்து நடைபெற்று முடிந்த சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

இந்த இரண்டு அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் மோத இருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மாபெரும் இறுதி போட்டியில் மோத இருக்கின்றன.

- Advertisement -

இதுவரை நடைபெற்ற அனைத்து உலக கோப்பை தொடர்களிலும் எட்டு முறை டாப் 8 அணிகள் மட்டுமே அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் விளையாடியுள்ளன. தற்போது முதல் முறையாக வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த அரையிறுதி சுற்றில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார்? என்று பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கணிப்பை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கணிப்பில் : தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று அந்த இரண்டு அணிகளுமே இறுதிப்போட்டியில் மோதும் என்று கணித்துள்ளார்.

இதையும் படிங்க : இது கூடவா தெரியாது.. கொஞ்சம் மூளையை யூஸ் பண்ணுங்க.. 2 காரணத்துடன் இன்சமாமுக்கு ரோஹித் பதிலடி

ஹர்பஜன் சிங் இவ்வாறு கணித்திருந்தாலும் நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தற்போது தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement