நான் கேப்டனாக இருந்தால் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக இவரைத்தான் விளையாட வைப்பேன் – ஹர்பஜன் அதிரடி

- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டுமே எஞ்சியுள்ளது. இந்த இறுதிப் போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆலோசனைகளை இந்திய அணிக்கு வாரி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக நான் இருந்தேன் என்றால் அனுபவம் வாய்ந்த வீரர் ஒருவருக்கு பதிலாக திறமையான இளம் வீரருக்கு தான் வாய்ப்பு அளிப்பேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசியுள்ள அவர்,

Ishanth

- Advertisement -

நான் மட்டும் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் இந்த இறுதிப் போட்டியில் மூன்று முழு நேர வேகப் பந்து வீச்சாளர்களை அடங்கிய அணியைத் தான் தேர்வு செய்வேன். அந்த அணியில் ஜாஸ்பிரித் பும்ரா மற்றும் முஹம்மது ஷமி ஆகிய இருவரும் கண்டிப்பாக இடம் பிடிப்பார்கள். மூன்றாவது பௌலராக இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக நான் முஹம்மது சிராஜைத் தான் தேர்வு செய்வேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

இந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி நான்காவது வேகப் பந்து வீச்சாளரை களமிறக்க நினைத்தால் அந்த இடத்தை முஹம்மது சிராஜிற்கு வழங்க வேண்டும் என்று இதற்கு முன்னரே பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை கூறியிருக்கின்றனர். ஆனால் ஹர்பஜன் சிங்கோ மூன்றாவது பவுலராக இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக சிராஜைதான் தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் இதற்கான தகுந்த விளக்கத்தையும் ஹர்பஜன் சிங் அளித்துள்ளார். அது பற்றி கூறிய அவர்,

Siraj-3

இஷாந்த சர்மா மிகச் சிறந்த வீரர் என்றாலும், சிராஜின் சமீபத்திய ஃபார்மை அடிப்படையாக கொண்டு நான் அவருக்கு தான் வாய்ப்பளிப்பேன். கடந்த ஆறு மாதங்களாகவே அவர் அற்புதமாக பந்து வீசி வருகிறார். இந்திய அணியில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்ற அதிக எதிர்பார்ப்பில் அவர் இருப்பதால், கொடுக்கப்படும் வய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக பந்து வீசி அசத்துகிறார். இஷாந்த் சர்மாவிற்கு சமீப காலமாகவே நிறைய காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. எனவே இந்த இறுதிப் போட்டியில் சமீபத்தில் ஃபார்மில் இருக்கும் சிராஜுக்குத்தான் நான் வாய்ப்பளிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

siraj 2

இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணி வீரர்களுக்கு பயிற்சிப் போட்டிகள் ஏதும் இல்லாததால் தற்போது இன்ட்ரா ஸ்குவாட் எனப்படும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த இறுதிப் போட்டியானது வருகிற 18ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியின் நேரலையானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில், இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement