ஐ.பி.எல் தொடரில் இந்த 4 பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசுவது ரொம்ப கஷ்டம் – ஹர்பஜன் ஓபன் டாக்

Harbhajan
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவிலும் இந்த தொடருக்கான வரவேற்பு அதிகரித்ததன் காரணமாக ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 12 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் இந்தாண்டு 13 ஆவது சீசன் மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருந்தது.ஆனால் கொரோனா இந்த கனவில் மண்ணை வாரிப்போட்டது என்றே கூறலாம்.

Harbhajan

- Advertisement -

ஆம் மார்ச் இறுதியில் துவங்க இருந்த இந்தத்தொடர் கொரோனா வைரஸ் காரணமாக இருமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்த தொடர் தற்போது கலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொடரை நடத்தாமல் விட்டால் பெருமளவு நிதியிழப்பு பி.சி.சி.ஐ க்கு ஏற்படும் என்ற காரணத்தினால் எப்படியாவது இந்த தொடரை நடத்தி விடவேண்டும் என்று திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ள இந்த ஓய்வு நேரத்தினை வீரர்கள் சமூக வலைத்தளம் மூலமாக ரசிகர்களுடன் கலந்துரையாடியபடி கழித்து வருகின்றனர். அந்தவகையில் ஹர்பஜன் ஐபிஎல் குறித்த தனது அனுபவத்தினை பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடரில் ஹர்பஜன் சிங் கடந்த 12 வருடமாக ஆடி வருகிறார். முதல் பத்து வருடங்கள் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர். கடந்த இரண்டு வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

Harbhajan1

தற்போது 39 வயதான அவர் 150 போட்டிகளுக்கு மேல் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடியுள்ளார்.
அவ்வளவு அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் ஒரு நான்கு பேட்ஸ்மேன்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களுக்கு பந்துவீசும் போதெல்லாம் பதட்டமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதில் ஒருவர் டேவிட் வார்னர்.

- Advertisement -

இவர் ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் இவர் குறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் வார்னர் கட் மற்றும் ஸ்விச் ஷாட் என இரண்டையும் நன்றாக ஆடுவார். பின்னோக்கியும் முன்னோக்கி வந்து அதிரடியாக ஆடக்கூடிய அவருக்கு பந்துவீசுவது வரும் சற்று கடினம். அதே நேரத்தில் கிறிஸ் கெயில் எவ்வளவு வேகமாக வீசினாலும் சிக்சர் விளாசுவார்.

Warner

ஆனால் மெதுவாக வீசினால் அவரால் இறங்கி வந்து அடிக்க முடியாது. இவரும் எனக்கு அச்சத்தை கொடுத்தவர். அதற்கு அடுத்து ரோகித் சர்மா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இவர்கள் இருவருக்குமே பந்து வீசுவது கடினம்.அதே நேரத்தில் அதிரடி ஆடுவார்கள் என்பதை கணிக்க முடியாது. இவர்களுக்கு பந்து வீசுவது சற்று மிகவும் கடினமான விஷயம்.

ABD-1

இந்த நான்கு பேட்ஸ்மேன்களுக்கு ஐபிஎல் தொடரில் பந்து வீசும் போதெல்லாம் பதட்டமாக இருந்து உள்ளேன் என்று கூறியுள்ளார் ஹர்பஜன்சிங் .அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement