Harbhajan Singh : நான் இருக்குற வரைக்கும் சென்னை அணிக்காக இதனை தொடர்ந்து செய்வேன் – ஹர்பஜன் சிங்

இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ஹர்பஜன் சிங் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

Harbhajan
- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.

Dhoni 1

- Advertisement -

அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது துவக்க வீரரான டூப்ளிஸிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்களை அடித்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆடி அணியை ஒரு நல்ல இலக்கினை எட்ட உதவினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது.

அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

harbhajan

அதன்பிறகு பேசிய ஹர்பாஜன் கூறியதாவது : இன்றைய போட்டியில் தோனி என்னை அணியில் இணைக்கும் போதே நான் முடிவெடுத்து விட்டேன் இன்றைய போட்டியில் நான் மேட்ச் வின்னராக இருக்கவேண்டும் என்று எனக்குள் முடிவெடுத்தேன். அதனால் தோனி என் திறமையை நம்பி இரண்டாவது ஓவரே எனக்கு வீச கொடுத்தார். அதே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை திருப்பினேன்.

இந்த போட்டியில் அணியின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது. மேலும், சென்னை அணிக்காக நான் எப்போதும் சிறப்பாக விளையாட கடமைபட்டுள்ளேன். மைதானம் இன்று எனது பந்துவீச்சுக்கு நன்றாக கைகொடுத்தது என்று ஹர்பஜன் கூறினார்.

Advertisement