கோலியின் முடிவு தவறானது. பண்ட் 4 ஆவது வீரருக்கு தகுதி இல்லாதவர். இவரே 4 ஆவது இடத்துக்கு தகுதியானவர் – கவாஸ்கர்

Gavaskar

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. நேற்றைய போட்டியில் நான்காவது வீரராக இந்திய அணியின் ரிஷப் பண்ட் களமிறங்கினார்.

pant 1

இந்நிலையில் ரிஷப் பண்ட் 4-வது வீரராக களம் இறங்கியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : கோலி தொடர்ந்து 4-வது வீரராக பண்ட்டை களம் இறக்குகிறார். ஆனால் அவரின் இந்த முடிவை நான் விரும்பவில்லை.

ஏனெனில் பண்ட் 4 ஆவது இடத்திற்கு தகுதியான வீரர் கிடையாது. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை 4 ஆவது இடத்தில் களம் இறக்கலாம். இதற்கு உதாரணமாக நேற்றைய போட்டியை நாம் கணக்கில் கொள்வோம். பண்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அணியின் சூழலைப் புரிந்து நிதானமாக விளையாடி 71 ரன்கள் குவித்து அணியை நிலப்படுத்தினார்.

iyer

பண்ட் விளையாடும் விதம் அதிரடியானது அவரது ஸ்டைல் 4 ஆவது இடத்திற்கு சரியாக இருக்காது. எனவே ஷ்ரேயாஸ் ஐயரை 4 ஆவது இடத்திலும், பண்டை 5 அல்லது 6 ஆவது இடத்தில் களமிறக்கலாம் என்று கவாஸ்கர் கூறினார்.

- Advertisement -