டைம் மெஷின் கிடைச்சா.. யாரோ ஒருத்தரான தோனியை செய்ய விடாம நானே செஞ்சுருப்பேன்.. கம்பீர் வருத்தம்

Gautam Gambhir 5
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் நடைபெற்று வரும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையுடன் நிறைவு பெறுகிறது. மறுபுறம் 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை ஃபைனல்களில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த கம்பீர் இந்திய அணி தோனி தலைமையில் சாம்பியன் பட்டங்களை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அத்துடன் ஐபிஎல் தொடரில் கேப்டனாக அவர் 2012, 2014 வருடங்களில் கொல்கத்தா அணிக்கு 2 கோப்பைகளை வென்றுள்ளார். மேலும் இந்த வருடம் ஆலோசகராக வந்ததும் அவருடைய தலைமையில் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வென்றது. எனவே அவரை அடுத்த பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன.

- Advertisement -

கம்பீர் வருத்தம்:
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் நியமினம் பற்றி கௌதம் கம்பீர் வாய் திறக்க மறுத்து விட்டார். இருப்பினும் வாய்ப்பு கிடைத்தால் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் யாரோ ஒருவரை ஃபினிஷிங் செய்யவிடாமல் இந்தியாவுக்காக தாமே ஃபினிஷிங் செய்ய விரும்புவதாக கம்பீர் கூறியுள்ளார். இது பற்றி பிடிஐ பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“நீங்கள் என்னிடம் கடினமான கேள்விகளை கேட்கிறீர்கள். அதற்கான பதிலை தற்போது கொடுப்பது கடினம். தற்போதைக்கு அற்புதமான பயணத்தை முடித்துள்ள நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எப்போதும் ரசிகர்களுக்காக சிறப்பாக செயல்படுவதை பற்றி நினைப்பேன். என்னுடைய கேரியரின் நடுப்பகுதியில் இந்தியாவுக்காக 6 போட்டிகளில் கேப்டனாக செயல்படும் கெளரவம் கிடைத்தது”

- Advertisement -

“மற்றபடி எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. ஏனெனில் தொடரின் கேப்டனாக செயல்படுவது என்னுடைய வேலையில்லை. என்னுடைய நாட்டை வெற்றி பெற வைப்பதே எனது வேலை. எந்த அணிக்காக விளையாடினாலும் அவர்களை வெற்றி பெற வைப்பது என்னுடைய வேலை. இருப்பினும் 2011 உலகக் கோப்பை ஃபைனலை நான் ஃபினிஷிங் செய்திருக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க: இந்திய அணியில் அவருக்கு மட்டுமே பயிற்சியாளர் கூட கோச்சிங் தரமாட்டாரு – அக்சர் படேல் பேட்டி

“அங்கே யாரோ ஒருவரிடம் பொறுப்பை விடுவதை விட ஃபினிஷிங் செய்ய வேண்டியது என்னுடைய வேலையாக இருந்தது. ஒருவேளை கடிகாரத்தை சுழற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அங்கே நான் சென்று எவ்வளவு ரன்கள் அடிக்கிறேன் என்பதை தாண்டி வெற்றியை கொடுக்கும் கடைசி ரன்னை அடிக்க விரும்புகிறேன்” என்று கூறினார். அந்த வகையில் உலகக்கோப்பை ஃபைனலில் ஃபினிஷிங் செய்யாதது இன்னும் கம்பீரின் மனதுக்குள் குமுறலாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement