1992இல் 11 வயதில் ஆஸி அழ வெச்சாங்க.. அதனாலேயே இந்தியாவுக்கு 2011 உ.கோ வெல்ல முடிவெடுத்தேன்.. கம்பீர்

Gautam Gambhir 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 2013க்குப்பின் ஐசிசி தொடரில் 10 வருடங்களாக சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்து வரலாறு படைத்தது. அதனால் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட அனைத்து இந்திய வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டனர்.

இந்நிலையில் தம்முடைய 11 வயதில் உலகக் கோப்பையில் இந்தியா சந்தித்த தோல்வியைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுததாக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதனாலயே நாளடைவில் இந்தியாவுக்காக விளையாடி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியமும் தமக்குள் உருவானதாக கம்பீர் கூறியுள்ளார். அதாவது 1992 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

அழுத்த கம்பீர்:
அப்போட்டியில் கடைசி ஓவரில் வேங்கடபதி ராஜு ரன் அவுட்டானதால் இந்தியாவை வெறும் 1 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. அந்த தோல்வியைப் பற்றி சமீபத்திய பேட்டியில் கௌதம் கம்பீர் பேசியது பின்வருமாறு. “ஒரு போட்டியை பார்த்த பின்பு நான் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்ல விரும்பினேன்”

“பிரிஸ்பேன் நகரில் 1992 உலகக் கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய போட்டி இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. அப்போட்டியில் இந்தியா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் அன்றைய நாள் முழுவதும் நான் அழுதேன். அதற்கு முன்பு அல்லது அதற்கு பின்பு நான் அப்படி அழுததில்லை. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. அந்த சமயத்தில் எனக்கு 11 வயது”

- Advertisement -

“அன்றைய நாள் முழுவதும் அழுத நான் ஒரு நாளில் இந்தியாவுக்கு உலகக்கோப்பை வெல்ல விரும்பினேன். 1992இல் சொன்ன அந்தக் கனவை 2011இல் முழுமையாக்கினேன். அந்தப் போட்டியில் வேங்கடபதி ராஜு கடைசியில் ரன் அவுட்டானதால் இந்தியா 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது எனக்கு நினைவிருக்கிறது. அந்தப் போட்டி இந்திய நேரப்படி அதிகாலையிலேயே வரும்”

இதையும் படிங்க: ஜிம்பாப்வே தொடரில் சாய் சுதர்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்.. 3 வீரர்களை சேர்த்த பிசிசிஐ.. வாய்ப்பு கிடைத்தது எப்படி?

“அதனால் நான் அதிகாலை 5 மணிக்கே எழுந்து அப்போட்டியை பார்த்தேன். ஆனால் அந்தப் போட்டிக்கு முன்பும் பின்பும் நான் அவ்வளவு சோகமாக இருந்ததில்லை” என்று கூறினார். முன்னதாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் அடித்த கம்பீர் 2011 உலகக் கோப்பை ஃபைனலில் 97 ரன்கள் அடித்தார். அதனால் இந்தியாவுக்காக 2 உலகக் கோப்பையை வென்ற அவர் சாம்பியனாக சாதனை படைத்தார்.

Advertisement