பயப்படுவதை நிறுத்துங்க, டி20 உ.கோ’யில் ஷாஹீன் அப்ரிடியை எதிர்கொள்ள முன்னாள் வீரர் சூப்பர் ஆலோசனை

Shaheen-afridi-1
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இத்தொடரின் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. காரணம் இவ்விரு அணிகளும் எல்லைப் பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இதுபோன்ற ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டுமே மோதுகின்றன. அதில் கடந்த 1992 முதல் பங்கேற்ற அத்தனை உலகக்கோப்பைகளிலும் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா வீரநடை போட்டு வந்தது.

- Advertisement -

ஆனால் கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் உலக கோப்பையில் விராட் கோலி தலைமையிலான இந்தியாவை தோற்கடித்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து சரித்திரத்தை மாற்றி எழுதியது. அதனால் அவமான தோல்வியை சந்தித்த இந்தியா அதே துபாயில் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை லீக் சுற்றில் வென்றாலும் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் தோற்று பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. எனவே அந்த 2 தோல்விகளுக்கு இம்முறை மெல்போர்ன் நகரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அப்ரிடிக்கு பயப்படாதீங்க:
இருப்பினும் கடைசி கட்ட ஓவர்களில் ரன்களை வாரி வழங்குவதை வழக்கமாக வைத்துள்ள புவனேஸ்வர் குமார் போன்ற மித வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளது இந்தியாவுக்கு முதல் அடியிலேயே சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்க ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆசிய கோப்பையில் பங்கேற்காவிட்டாலும் காயத்திலிருந்து குணமடைந்தது இந்த உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக களமிறங்க தயாராகி வருகிறார்.

Jasprit Bumrah Shaheen Afridi

பொதுவாகவே ரோஹித், ராகுல், விராட் ஆகியோர் அடங்கிய இந்திய டாப் ஆர்டர் பேட்டிங் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் அவரது வருகை இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடியை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு முதலில் அவருக்கு எதிராக டிஃபன்ஸ் ஆடாமல் பயமின்றி அடித்து ஆட வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

அவருக்கு எதிராக விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ளும் வகையில் விளையாடினால் தடுமாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் மாறாக ரன்களை குவிக்கும் நோக்கத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஷாஹீன் அப்ரிடியை எதிர்கொள்ளும்போது முதலில் நீங்கள் அவருக்கு எதிராக உங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கக் கூடாது. மாறாக ரன்களை அடிக்கப் பார்க்க வேண்டும். ஏனெனில் அவரிடம் நீங்கள் உங்களது விக்கெட்டை காப்பாற்ற நினைக்கும்போது பேக் லிப்ட், புட் ஒர்க் போன்ற அனைத்தும் சிறிதாகிவிடும்”

Gambhir

“ஆனால் டி20 கிரிக்கெட்டில் நீங்கள் உங்களது விக்கெட்டை காப்பாற்றிக்கொள்ள நினைக்கக் கூடாது. அவர் புதிய பந்தில் ஆபத்தானவர் என்பதை நானும் அறிவேன். ஆனால் எதிரணி பவுலர் யாராக இருந்தாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்து நல்ல நிலைமைக்கு வர முயற்சிக்க வேண்டும். அதற்கு வலுவாக அடிப்பதை விட டைமிங் கொடுத்து அடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதை பின்பற்றினால் இந்தியாவுக்கு நல்லதே நடக்கும். ஏனெனில் இந்தியாவிடம் டாப் ஆர்டரில் ஷாஹீன் அப்ரிடியை எளிதாக எதிர்கொள்ளும் அளவுக்கு 3 – 4 தரமான பேட்ஸ்மேன்கள் உள்ளனர்” என்று கூறினார்.

அவர் கூறுவது போல் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் பேட்டிங் செய்தாலே நிச்சயம் அவுட்டாக அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் ஏற்கனவே இந்தியாவை ஆட்டிப் பார்த்துள்ள அவர் காயத்திலிருந்து திரும்பி மீண்டும் பழைய டெக்னிக்கை பயன்படுத்தி பயமுறுத்த நினைப்பார். அந்த இடத்தில் அவரை கண்டு பயப்படாமல் அவரை பயமுறுத்தும் வகையில் இந்திய டாப் ஆர்டர் பேட்டிங் செய்வதே வெற்றிக்கு வித்திடும் என்பதே நிதர்சனம்.

Advertisement