ஐ.பி.எல் தொடர் ஒத்திவைப்புக்கு பின் உள்ள பின்னணி இதுதான் – கங்குலி விளக்கம்

Ganguly
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது வரை கிட்ட தட்ட உலகம் முழுவதும் 5000 பேர் வரை இதற்கு பலியாகி உள்ளனர். இதன்காரணமாக பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒன்றாக கூட பல அரசாங்கங்கள் தடைவிதித்து வருகிறது.

IPL-1

- Advertisement -

மேலும் ஐரோப்பாவில் நடைபெறும் கால்பந்து போட்டிகளும் மூடிய மைதானத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற்று வருகிறது. இந்தியாவிலும் தென்னாய்ப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடர் கைவிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளதாவது : வேறு வழியின்றி ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் இந்திய வீரர்களை வைத்து மூடி அரங்கில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா என்று விவாதிக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வந்தோம்.

Ganguly

இதன் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரை நிறுத்தி வைத்துள்ளோம். தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஆனால் இதுவும் நிரந்தரமில்லை என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி. தற்போது உள்ள சூழ்நிலையில் மக்களின் பாதுகாப்பே முக்கியம் அதன்காரணமாக ஐ.பி.எல் முக்கியமில்லை என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வருமாயின் மீண்டும் போட்டிகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் அடுத்த மாதமும் இதே சூழ்நிலை தொடருமாயின் இந்த தொடர் முழுவதுமாக ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

IPL

மேலும் மூடிய மைதானத்தில் ஐ.பி.எல் தொடர் நடத்தப்படலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் ரசிகர்கள் ஆரவாரமின்றி இந்த ஐ.பி.எல் தொடர் சுவாரசியமாக அமையுமா ? என்பது சந்தேகம் தான்.

Advertisement