நான் ஓய்வு பெரும்போது ரொம்பவே வருத்தப்பட்டேன். அதற்கு காரணம் இதுதான் – கங்குலி வருத்தம்

Ganguly 1
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இடதுகை பேட்ஸ்மேனும், தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சௌரவ் கங்குலி அவரது அண்ணனுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக தனது பூர்வீக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவர் குறித்த செய்திகள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Ganguly

- Advertisement -

அந்த வகையில் தற்போது கங்குலி ஓய்வு பெற்ற கடைசி கால கிரிக்கெட் குறித்து பெங்கால் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் கங்குலி தனது கிரிக்கெட்டின் கடைசி காலத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேசியதுடன் தற்போதும் தன்னால் விளையாட முடியும் என்றும் தெரிவித்துள்ளா.ர் இது குறித்து கூறுகையில் :

எனக்கு இன்னும் கூடுதலாக இரண்டு தொடர்கள் ஒருநாள் போட்டியில் கொடுக்கப்பட்டிருந்தால் நான் இன்னும் அதிக ரன்கள் அடித்து இருப்பேன். மேலும் டெஸ்ட் போட்டிகளில் நாக்பூர் போட்டியின் போது ஓய்வு பெறாமல் இருந்திருந்தால் அடுத்த 2 டெஸ்ட் தொடரிலும் என்னால் விளையாடி இருக்க முடியும் மேலும் அந்த தொடர்களில் நான் அதிக ரன்களை அடித்து இருப்பேன். ஆனால் சூழல் அப்போது எனக்கு சாதகமாக இல்லை.

Ganguly

என் மீது இருந்த அழுத்தம் காரணமாகவே நான் அது போன்ற ஒரு முடிவை எடுக்க நேரிட்டது மேலும் ஓய்வு பெறுவதற்கான தருணம் அதுவே என்று உணர்ந்து ஓய்வையும் அறிவித்தேன். ஆனால் உண்மையிலேயே தற்போது எனக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டால் அதன் பின்னர் மூன்று ரஞ்சி போட்டிகளில் விளையாடினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக என்னால் இப்போதும் களமிறங்கி சிறப்பாக ரன்களை குவிக்க முடியும்.

- Advertisement -

ஆறு மாத பயிற்சி கூட வேண்டாம் மூன்று மாதங்கள் எனக்கு பயிற்சி கொடுத்தால் போதும் இப்போது கூட என்னால் ரன்கள் அடிக்க முடியும் என்று கங்குலி உறுதியுடன் கூறியுள்ளார். இப்போது எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் கூட போகலாம் ஆனால் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை எப்படி உடைக்க முடியும் என்று கங்குலி கூறியது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு கங்குலி ஓய்வு பெற்றார்.

Ganguly-1

மேலும் நன்றாக விளையாடிய போதிலும் நீக்கப்பட்டதால் அப்புறம் எப்படி நிரூபிப்பது யாரிடமும் நிரூபிப்பது என்ற விஷயம் என்னுள் இருந்துகொண்டே இருந்தது என்று கூறினார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7212 ரன்களும், 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்து 363 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement