இந்திய அணியில் இருந்து நான் நீக்கப்பட இவர் ஒருவர் மட்டுமே காரணமில்லை. ஆனால் – மனம்திறந்த கங்குலி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆறு வருடங்கள் கேப்டனாக இருந்தவர் சௌரவ் கங்குலி .அவரது காலத்தில் தான் இந்திய அணி ஆக்ரோஷமாக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றது. தற்போது இருக்கும் மிகச் சிறந்த வீரர்கள் எல்லாம் கங்குலியின் காலத்தில் அறிமுகமானவர்கள் தான். அவர் கண்டெடுத்த அனைவரும் இன்று பெரிய வீரர்களாக திகழ்ந்து வருகின்றனர்.

Ganguly

- Advertisement -

ஆனால் இவருக்கு 2005 ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய சிக்கல் வந்தது. பயிற்சியாளர் கிரெக் சாப்பல் கடுமையான நெருக்கடி கொடுத்து சவுரவ் கங்குலியை அணியில் இருந்து நீக்கக் காரணமாக இருந்தார். இந்நிலையில் தற்போது சமீபத்தில் இது குறித்து பேசியுள்ளார் சௌரவ் கங்குலி. அவர் கூறுகையில்..

நான் அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு கிரேக் சாப்பல் மட்டும் காரணம் இல்லை .அவர் மீது மட்டும் குற்றம் சாட்ட மாட்டேன். ஆனால் அதனை தொடங்கி வைத்து அவர் தான் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அவரே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட முதன்மை காரணமாக இருந்தார்.

Chappell

என்னை பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியதும் இவர்தான். அந்த கடிதம் மீடியாவிலும் கூட வந்தது. எங்கள் அணி ஒரு குடும்பம் போல இருந்தது. கருத்து வேறுபாடுகள், தவறான புரிதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதனை சரி செய்வதற்கு பேச்சுவார்த்தை மூலம் தேர்வு கண்டுகொள்ள வேண்டும் என்றார்.

- Advertisement -

நீங்கள் ஒரு கோச் அணியின் முன்னேற்றத்திற்கு எது அவசியமோ அதனை நேரடியாகவே கூறி இருக்கலாம். ஆனால் அவர் எண்னிடம் பேசவில்லை ஒருவேளை இதனை அவர் என்னிடம் சொல்லி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்தார் என்று தற்போது கூறியுள்ளார் சௌரவ் கங்குலி.

Ganguly-3

இந்திய அணிக்காக 1996ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை ஆடினார். 113 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7212 ரன்களும், 311 ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களையும் குவித்துள்ளார். மேலும் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற அவர் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான பணிகளிலேயே ஈடுபட்டு இப்போது பி.சி.சி.ஐ யின் தலைவராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement