அவரை பத்தி பேச ஏதுமில்லை. அது குறித்து நான் வாய் திறக்க மாட்டான். தோனி குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட – கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம் ஆன பிசிசிஐ வருடம்தோறும் இந்திய அணி வீரர்களுக்கான சம்பளம் குறித்த ஒப்பந்த பட்டியலை வெளியிடும். அதன்படி இந்த வருடத்திற்கான (அக்டோபர் 2019 – செப்டம்பர் 2020) சம்பளப் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இதுவரை ஏ பிளஸ் பட்டியலில் இடப்பெற்றிருந்த தோனி நீக்கப்பட்டுள்ளார்.

dhoni

- Advertisement -

அதன்படி ஏ ப்ளஸ் பிரிவில் உள்ள ஊழல் வீரர்களுக்கு 7 கோடி, ஏ கிரேட் வீரர்களுக்கு 5 கோடி, பி கிரேட் வீரர்களுக்கு 3 கோடி, சி கிரேட் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு கோடி என்று சம்பள அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஏ ப்ளஸ் பட்டியலில் கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் எந்த ஒரு பிரிவிலும் தோனியின் பெயரை பிசிசிஐ இணைக்கவில்லை. இதனால் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தோனி மீண்டும் விளையாடமுடியாது என்று ரசிகர்களிடையே வதந்தி பரவி வருகிறது. ஆனால் பி.சி.சி.ஐ ரூல்ஸ் படி ஒப்பந்தத்தில் இல்லாத வீரரும் இந்திய அணியில் விளையாடலாம் ஆனால் அவருக்கான சம்பளம் குறைவான அளவில் கிடைக்கும். பிறகு சி கிரேட் பிரிவில் இடம் பிடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

dhonistand

இந்நிலையில், தோனியின் பெயர் வீரர்கள் ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி அதுகுறித்து நான் கருத்து கூறமுடியாது. எல்லாம் விதிமுறைப்படி நடக்கிறது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் கங்குலி.

Advertisement