டெஸ்ட் கிரிக்கெட்டின் தற்போதைய சிறந்த பவுலர் என்றால் அது இவர்தான் – கம்பீர் பேட்டி

Gambhir
- Advertisement -

இந்திய அணி தற்போது இந்தூர் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருப்பது மட்டுமின்றி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலிலும் முதலிடத்தில் நீடிக்கின்றது.

ind 1

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இந்த சிறப்பான வெற்றி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : அணியின் பந்துவீச்சு அட்டகாசமாக இருந்தது. கடந்த பல தொடர்களாக இந்திய அணியின் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் சுழற்பந்துக்கு சாதகமான மைதானங்களில் கூட விக்கெட்டுகளை வீழ்த்துகின்றனர்.

ஷமி ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்கிறார். அவருடைய பந்துகளை பேட்ஸ்மேன்கள் இந்திய மைதானங்களில் உள்ள சூழ்நிலைகளில் கணிப்பது கடினம். ஏனெனில் அவருடைய வேகத்தில் கூடவே பந்தில் அதிக ஸ்விங் உள்ளதால் அவரின் பந்தை கணிக்க பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாறுகின்றனர். அதனால் ஷமி ஒவ்வொரு பந்தை வீசும் போதும் ஏதாவது நடக்கும் என்ற அளவிற்கு சிறப்பாக வீசுகிறார்.

Shami

என்னை பொறுத்தவரை சமீபத்தில் ரெட் பால் கிரிக்கெட்டில் உலகிலேயே சிறந்த பந்துவீச்சாளர் என்று கூறுவேன். மற்றவர்களிடம் காணப்படாத ஸ்விங் அதிக அளவு ஷமியிடம் உள்ளது. எதிரணிக்கு இவரைப்போன்ற ஒரு பவுலர் நிச்சயம் அச்சுறுத்தலாக தான் இருப்பார் என்றும் கம்பீர் கூறினார். மேலும் ஷமி கடந்த சில ஆண்டுகளாக தனது சிறப்பான பார்மில் இருக்கிறார் அதனால் அவரால் இவ்வளவு அற்புதமாக செயல்பட முடிகிறது என்று ஷமியை புகழ்ந்து பேசினார் கௌதம் கம்பீர்.

Advertisement