கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் இதுதான் நடக்கும் – சிறுவயது பயிற்சியாளர் கருத்து

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. இந்த தொடருக்கு அடுத்து தான் இந்திய அணியுடன் தொடர விரும்பவில்லை என ஏற்கனவே ராகுல் டிராவிட் அறிவித்து விட்டதால் அடுத்த பயிற்சியாளருக்கான தேடலை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தீவிரப்படுத்தி இருந்தது.

அந்த வகையில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பல்வேறு முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிசளிக்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் அடுத்த தலைமைப் பயிற்சியாளராக வர அதிக வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில நாட்களில் இந்த அறிவிப்பு அதிகபூர்வமாக வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் கௌதம் கம்பீரின் சிறு வயது பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் என்ன நடக்கும்? என்பது குறித்து பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

என்னுடைய மாணவன் ஒருவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக மாறினால் அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கும். அதோடு கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக மாறினால் நிச்சயம் இந்திய அணி உலக கோப்பையை வெல்லும்.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணிக்குள் இருக்கும் திறமையை அவர் சரியாக வெளிக்கொணர்ந்து புதிய உத்வேகத்தை அளிப்பார். நம்முடைய இந்திய அணி தற்போது சிறப்பாகவே விளையாடி வருகிறது. முந்தைய தொடர்களை விட தற்போது இந்திய அணியின் பந்துவீச்சும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. நிச்சயம் இந்திய அணி ஐசிசி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : மீண்டும் வங்கதேச அணியை சீண்டி தனது கருத்தினை தெரிவித்த சேவாக்.. என்ன இதெல்லாம் ? விவரம் இதோ

இந்தியாவில் நடநடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக இருந்த கம்பீர் அந்த அணியில் செய்த சில மாற்றங்கள் அந்த அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்ததாக ஏற்கனவே பலரும் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement