அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்த போதும் சாதனையை நிகழ்த்திய ஆப்கானிஸ்தான் வீரர் – விவரம் இதோ

Farooqi
- Advertisement -

டிரினிடாட் நகரில் நடைபெற்ற நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டிகள் டாசில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணயானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணியானது :

தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 11.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 57 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8.5 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

அதோடு இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெளியேறியிருந்தாலும் அந்த அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் பசல்ஹக் பரூக்கி டி20 உலக கோப்பை தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அது குறித்த விவரம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் போது தென்னாப்பிரிக்க வீரர் குவிண்டன் டி காக் விக்கெட்டை வீழ்த்திய அவர் இந்த தொடரில் மட்டும் 17 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இதுவரை நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் பசல்ஹக் பரூக்கி 17 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இருப்பினும் இந்த சாதனையை முறியடிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங்குக்கு ஒரு வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு அநியாயம் நடந்துருச்சு.. தட்டி கேட்க வேண்டிய ஐசிசி’யே இந்தியாவுக்கு செஞ்சுட்டாங்க.. மைக்கேல் வாகன் விமர்சனம்

ஏனெனில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இதுவரை 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அரையிறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மேலும் விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு உள்ளது. அதேபோன்று இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் பட்சத்தில் அந்த போட்டியிலும் அவர் விக்கெட்டை கைப்பற்றினால் அவர் முதலிடத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement