இத அப்போவே பண்ணிருக்கலாம் ! இனி வயசுக்கு வந்தா என்ன – ரோஹித்தின் மும்பையை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெற்ற 44-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் மும்பை ஆகிய அணிகள் நேருக்கு நேர் மோதின. நவிமும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 158/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 67 (52) ரன்கள் எடுக்க கடைசி நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 9 பந்தில் 21 ரன்கள் தெறிக்க விட்டார். மும்பை சார்பில் அதிகபட்சமாக ரிலே மெரெடித் மற்றும் ரித்திக் ஷாக்கீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

Jos Buttler vs Mi

- Advertisement -

அதை தொடர்ந்து 157 என்ற நல்ல இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 2 (5) ரன்களில் தமிழக வீரர் அஸ்வின் வீசிய மாயாஜால சூழலில் சிக்கி அவுட்டான பின் இஷான் கிசனும் 26 (18) ரன்களில் நடையைக் கட்டினார்.

மும்பை நிம்மதி வெற்றி:
அந்த நிலைமையில் அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இளம் வீரர் திலக் வர்மாவுடன் கைகோர்த்து 3-வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் 81 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தார். மும்பையை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்ற இந்த ஜோடியில் 51 (39) ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் முக்கிய நேரத்தில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே 35 (30) ரன்கள் எடுத்த திலக் வர்மாவும் அவுட்டானதால் மும்பைக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இருப்பினும் இறுதியில் 2 பவுண்டரி 1 சிக்சர் உட்பட 20* (9) ரன்களை டிம் டேவிட் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்ததால் 19.2 ஓவரில் 161/5 ரன்களை எடுத்த பஞ்சாப் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் அஷ்வின், சஹால், போல்ட் போன்றவர்கள் தலா 1 விக்கெட் எடுத்து வெற்றிக்கு போராடினாலும் பேட்டிங்கில் குறைவான ரன்கள் எடுத்த காரணத்தால் போராடி தோற்ற அந்த அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 3-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

அப்போவே செய்திருக்கலாம்:
முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்த வருடம் பங்கேற்ற தனது முதல் 8 போட்டிகளிலும் வரிசையாக தொடர் தோல்விகளை பெற்று மண்ணை கவ்வி பெருத்த அவமானத்திற்கும் கேலி கிண்டல்களுக்கும் விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த நிலையில் நேற்றைய போட்டியில் ஒரு வழியாக முதல் வெற்றியை பதிவு செய்த அந்த அணி மிகப்பெரிய நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது. அதிலும் நேற்று நட்சத்திர இந்திய வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவின் 35-வது பிறந்த நாளில் அந்த அணி பதிவு செய்த இந்த வெற்றியால் மும்பை ரசிகர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.

Tim David MI vs RR

இப்போட்டியில் 51 ரன்கள் குவித்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றாலும் கடைசி நேரத்தில் தேவைப்பட்ட அந்த எளிமையான 20* ரன்களை அடித்து பினிஷிங் கொடுத்த டிம் டேவிட் தான் வெற்றிக்கு துருப்பு சீட்டாக செயல்பட்டார். ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் போன்ற டி20 தொடர்களில் அற்புத ஆல்-ரவுண்டராக செயல்பட்ட அவரை அதன் காரணமாகவே 8.25 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தின் போது மும்பை அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கிய நிலையில் முதல் 2 போட்டிகளில் 1, 1 என வெறும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்ற காரணத்திற்காக பெஞ்சில் அமர வைத்தது.

ஆனால் பொதுவாக எந்த ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரராக இருந்தாலும் ஒருசில போட்டிகளில் சொதப்புவது சகஜம் என்பதால் குறைந்தது 4 – 5 போட்டிகளுக்கு அணி நிர்வாகங்கள் வாய்ப்பளிக்கும். ஆனால் இவரை 8.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கிவிட்டு ஒருசில போட்டிகளில் சொதப்பினார் என்பதற்காக அவரை பெஞ்சில் அமரவைத்த மும்பை அணி நிர்வாகம் வேறு வீரர்களை களமிறக்கிய போதிலும் வெற்றியை காண முடியாமல் வேறு வழியின்றி நேற்று மீண்டும் வாய்ப்பளித்தது. அதில் அசத்திய அவர் இதே போல் தொடர்ச்சியாக தமக்கு வாய்ப்பளித்திருந்தால் நிச்சயம் சிறப்பாக செயல்பட்டிருப்பேன் என்று நிரூபித்துக் காட்டினார்.

ஆனால் காலம் கடந்த பின் அவருக்கு மீண்டும் வாய்ப்பளித்த ரோகித் சர்மா மற்றும் மும்பை அணி நிர்வாகத்தை “இந்த முடிவை அப்போதே எடுத்துருக்கலாமே” என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும் தற்போதும் முதல் வெற்றியை பதிவு செய்துள்ள மும்பையை பார்த்து “இனி நீங்க வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன” என்றும் பல ரசிகர்கள் கிண்டல் அடிக்கின்றனர். ஏனெனில் ஏற்கனவே 8 தோல்விகளை பதிவு செய்துள்ள அந்த அணி ஐபிஎல் 2022 தொடருடன் முதல் அணியாக வெளியேறுவது 99.9% ஏற்கனவே உறுதியாகியுள்ளது.

Advertisement