எங்கள் திருமணம் பற்றி எந்த திட்டமும் இல்லை..! மும்பை வீரரின் காதலி அதிரடி..?

- Advertisement -

ஆஸ்திரேலிய வீரரும், தற்போதைய மும்பை அணியின் வீரருமான பேன் கட்டிங், மாடல் அழகியும் பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெண் தொகுப்பாளினியான எரின் ஹொலண்ட் என்பவரை காதலிப்பதாக தகவலைகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் தனக்கு தற்போதைக்கு பேன் கட்டிங்குடன் திருமணம் செய்யும் எந்த திட்டமும் இல்லை என்று எரின் கூறியுள்ளார்.
ben-erin
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர் பேன் கட்டிங் பிரபல தொகுப்பாளினி எரின் என்பவரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. இந்த ஐபிஎல் தொடரில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த எரின், மும்பை அணியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

பேன் மற்றும் எரின் சில கடந்த 3 வருடங்களுக்கு மேலாக டேட்டிங்கில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இவர்கள் இருவரும் திருமணம் குறித்து எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. சமீபத்தில் இது குறித்து பேசிய எரின் “நான் என்னுடைய தோழிகள் திருமணத்தில் பல முறை என்னுடைய தோழிகளுடன் சேர்ந்து திருமண பாடல்களை பாடியுள்ளேன், ஆனால் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணாக என்னை நான் எண்ணி பார்த்தது இல்லை ” என்று கூறியுள்ளார்.
ben

- Advertisement -

டெய்லி மெயில் என்ற பத்திரிகையில் வந்த தகவலின்படி , எரின் தனது சகோதரர் மற்றும் தந்தை கிரிக்கெட் போட்டிகளை விளையாடும் போது அவ்வளவாக கிரிக்கெட்டின் மீது நாட்டம் காட்டியது இல்லை போல தெரிகிறது .”நான் இப்போது பேன் ஆட்டமிழக்கும் போது வருத்தமடைகிறேன்.தற்போது நான் அவருடன் டேட்டிங்கில் ஈடுபட்டு வருகிறேன் ” என்று எரின் குறிப்பிட்டுள்ளதாக அந்த பத்திரிகையில் கூறியுள்ளனர். எனவே இவர்கள் இன்னும் டேட்டிங் எண்ணத்தில் தான் இருக்கின்றனரா என்று எண்ணம் தோன்றுகிறது.

Advertisement