இந்திய அணிக்கெதிரான எங்களது சிறப்பான வெற்றிக்கு இதுவே காரணம் – இயான் மோர்கன் மகிழ்ச்சி

Morgan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி வெறும் 124 ரன்கள் மட்டுமே குவிக்க இங்கிலாந்து அணி 15 ஓவர்களில் எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் எங்களது பவுலிங் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் அதிவேகமாக பந்துவீசுவதில் வல்லவர் ஆனால் இந்த போட்டியில் அவரை விட அதிவேகமாக மார்க் வுட் தனது பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். இன்று இரவு அவர் வீசிய பந்துகள் கடினமானவை.

குறிப்பாக பவுலிங் யூனிட் சிறப்பாக இருந்தது. மைதானம் நாங்கள் நினைத்தது போன்றே சிறப்பாக இருந்தது. எங்களுடைய திட்டங்கள் எளிமையாகவும் சிறப்பாகவும் இருந்ததால் எங்களால் சிறப்பாக பவுலிங் செய்ய முடிந்தது. பந்துவீச்சாளர்கள் அனைவரும் சரியான லென்த் மற்றும் வேகத்தில் பந்து வீசி வருகின்றனர்.

iyer 1

ஜேசன் ராய் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். இது அணிக்கு ஒரு நல்ல பலத்தை தந்துள்ளது. மேலும் எங்களது அணியில் பேட்ஸ்மேன்களுக்கு இடையே எந்த அளவிற்கு போட்டி உள்ளதோ அதே வகையில் பவுலர்களுக்கும் இடையே போட்டி உள்ளது. இது அணிக்கு நல்ல ஆரோக்கியமான அமைப்பை தந்துள்ளது.

eng

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து டி20 வகையான போட்டிகள் சற்று வித்தியாசமானவை அந்த வகையில் நாங்கள் இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புவதாக மோர்கன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement