அந்த கட்டத்தில் 8 பாலில் 3 விக்கெட்டுகளை இழந்தோம் இதுவே தோல்விக்கு காரணம் – மோர்கன் வருத்தம்

Morgan
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் 3வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதிநேரத்தில் ஸ்ரேயாஸ் அய்யர் 18 பந்துகளில் 37 ரன்கள் குவித்து அதிரடி காட்ட இந்திய அணி 185 ரன்களை குவித்தது.

INDvsENG

- Advertisement -

அதன் பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே குவித்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில் : இந்த போட்டியில் இந்திய அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை. இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்றே நினைக்குறேன். இந்த போட்டியில் ஸ்விங் மற்றும் மொமெண்ட்டம் ஆகியவை இந்திய அணிக்கு கடைசி ஓவர்களில் சாதகமாக அமைந்தது.

thakur 1

இந்த தொடரில் இருந்து நாங்கள் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். உலக கோப்பைக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் இந்த தொடர் எங்களுக்கு அவசியமான ஒரு பாடமாகும். இந்த தொடரின் பாதிவரை இந்திய அணிக்கு கடுமையான போட்டி கொடுத்ததில் மகிழ்ச்சி. இந்தப் போட்டியின் போது 16 மற்றும் 17 ஓவர்களில் 8 பந்துகளில் 3 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தது இந்திய அணிக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

Thakur

அதிலும் குறிப்பாக பேர்ஸ்டோ மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் ஆட்டம் இருந்து வெளியேறியது இந்திய அணியின் வெற்றிக்கு சாதகமான பலனை அமைத்தது. அவர்களது பந்துவீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அதனால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. இந்திய அணி வீரர்கள் அவ்வளவு சிறப்பாக பந்துவீசி எங்களது வெற்றியை பறித்தனர். மேலும் இந்த கடைசி போட்டி இரு அணிகளுக்கும் இடையே பலமாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement