பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா..! ஒழுங்கா விளையாடலனா டீம்ல நீடிக்கிறது கஷ்டம்..! கோலி அதிரடி..!

virat
Advertisement

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 தொடரை இந்திய அணி வென்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
joe
இதையடுத்து ரோஹித் ஷர்மாவும் – தவானும் இந்திய அணி சார்பில் களமிறங்கின. தடுமாற்றத்துடன் விளையாடிய  ரோஹித் 18 பந்துகளில் 2 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின்னர் கேப்டன் கோலியும் – தவானும் இணைந்தனர். இதில் தவான் 44 ரன்களில் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய தினேஷ் கார்த்திக், கோலிக்கு நன்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார். 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர் ரஷீத் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

அரை சதம் கடந்த கேப்டன் கோலியும் 71 ரன்களில் விக்கெட்டைப் பறிக்கொடுத்தார். சற்றுதாக்குப்பிடித்த தோனி 42 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஷர்துல் தாகூர் அதிரடி காட்ட, 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் குவித்தது.  இங்கிலாந்து தரப்பில் டேவிட் வில்லி மற்றும் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. ஜேம்ஸ் வின்ஸ், பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்களையும், பேர்ஸ்டோவ் 30 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் – மோர்கன் இணை அதிரடி காட்டியது. இந்திய அணியின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை குவிக்க தொடங்கினர். இவர்களது இணையை பிரிக்க இந்திய அணி எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை.
root
10 பவுண்டரிகளை விளாசிய ஜோ ரூட் 100 ரன்களுடனும், 1 சிக்ஸர் 9 பவுண்டரிகளுடன் மோர்கனும், இறுதிவரை ஆட்டமிழக்காமலிருந்தனர். 44.3 ஓவரில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 260 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் இந்திய அணி தரப்பில் தாகுர் மட்டும் 1விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -
Advertisement
SOURCEvikatan