- Advertisement -
உலக கிரிக்கெட்

41 ரன்ஸ்.. 2 முறை சோதித்த மழையை தாண்டி நமீபியாவை இங்கிலாந்து வீழ்த்தியது எப்படி? சூப்பர் 8 கிடைத்ததா?

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 15ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு ஆண்டிகுவா நகரில் 34வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் இடம் வகிக்கும் இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதின. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே இங்கிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.

ஆனால் அந்த வாழ்வா சாவா சூழ்நிலையில் மழை இங்கிலாந்து மிகப்பெரிய சோதனை செய்தது என்று சொல்லலாம். ஏனெனில் ஆரம்ப முதலே 2 – 3 முறை மழை விட்டுவிட்டு பெய்ததால் அந்தப் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி காணப்பட்டது. இருப்பினும் மழை விட்ட போதெல்லாம் மைதான பராமரிப்பாளர்கள் தீயாக வேலை செய்து போட்டியை துவங்கினார்கள்.

- Advertisement -

ஆஸி கையில் இங்கிலாந்து:
அதன் காரணமாக இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணி வாக்கில் 11 ஓவர்கள் கொண்ட போட்டியாக துவங்கப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து பேட்டிங்கை துவங்கிய போது மறுபடியும் மழை வந்து ஓய்ந்ததால் மீண்டும் 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கேப்டன் ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் பில் சால்ட் 11 (8) ரன்களும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக 31 (18) ரன்களும் எடுத்தனர். அவர்களை விட மிடில் ஆடரில் ஹரி ப்ரூக் அதிரடியாக 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 47*(20) ரன்கள் விளாசினார். அவருடன் மொய்ன் அலி 16, லியம் லிவிங்ஸ்டன் 13 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து 10 ஓவரில் 122/5 ரன்கள் எடுத்தது. நமீபியா சார்பில் அதிகபட்சமாக ட்ரம்பல்மேன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

அதைத் தொடர்ந்து 123 ரன்களை துரத்திய நமீபியாவுக்கு துவக்க வீரர்கள் மைக்கேல் லிங்கன் மெதுவாக விளையாடி 33 (29) ரன்களில் அவுட்டானார். அதே போல மறுபுறம் மெதுவாக விளையாடிய நிக்கோலஸ் டேவின் 18 (16) ரன்கள் எடுத்து தம்மால் முடியாது என்று ரிட்டயர் டவுட்டாகி சென்றார். அதைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் டேவிட் வீஸ் அதிரடியாக 27 (12) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக வந்த கேப்டன் எராஸ்மஸ் 1*, ஸ்மித் 0* ரன்கள் மட்டுமே எடுத்து ஃபினிஷிங் செய்ய தவறினர்.

இதையும் படிங்க: இந்தியாவில் ரோஹித் – பாண்டியா பிரச்சனையை விட மோசம்.. பாகிஸ்தானின் தோல்வி பற்றி இர்பான் பதான்

அதனால் 10 ஓவரில் நமீபியா 84/3 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 41 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி வென்ற இங்கிலாந்து 5 புள்ளிகளை பெற்று ஸ்காட்லாத்தை விட அதிக ரன்ரேட்டை பெற்றது. அதனால் தற்போது நடைபெற்று வரும் 35வது லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை ஆஸ்திரேலியா வீழ்த்தும் பட்சத்தில் இங்கிலாந்து சூப்பர் 7 சுற்றுக்கு தகுதி பெறும்.

- Advertisement -