- Advertisement -
உலக கிரிக்கெட்

ஒரே ஓவரில் 6, 6, 6, 6, 6.. சோலார் பேனலை உடைத்து அமெரிக்காவை ஓடவிட்ட பட்லர்.. இங்கிலாந்து செமி ஃபைனல்

ஐசிசி 2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜூன் 23ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8:00 மணிக்கு பார்படாஸ் நகரில் 49வது போட்டி நடைபெற்றது. அந்த சூப்பர் 8 போட்டியில் அமெரிக்காவுக்கு எதிராக டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா ஆரம்பம் முதலே தடுமாற்றமாக பேட்டிங் செய்தது.

அந்த வகையில் இங்கிலாந்தின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்கள் தாக்கு பிடிக்க முடியாத அந்த அணி 18.5 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக நித்திஷ் குமார் 30, கோரி ஆண்டர்சன் 29 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்து மொத்தம் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

மிரட்டிய பட்லர்:
அவருடன் அடில் ரசித் மற்றும் ஷாம் கரன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 116 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பிலிப் சால்ட் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். அதில் பிலிப்ஸ் சால்ட் கொஞ்சம் நிதானமாக விளையாடினார். ஆனால் மறுபுறம் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 4வது ஓவரின் 3வது பந்தில் 104 மீட்டர் மெகா 6 பறக்க விட்டு மைதானத்தில் இருந்த சோலார் பேனலை உடைத்தார்.

அந்த வகையில் நேரம் செல்ல செல்ல அதிரடியை அதிகப்படுத்திய அவர் ஹர்மீத் சிங் வீசிய 9வது ஓவரின் 2, 3, 4, 5, 6 ஆகிய 5 பந்துகளில் அடுத்தடுத்து 5 சிக்சர்களை பறக்க விட்டு அரை சதத்தை அடித்தார். அதே வேகத்தில் பட்டைய கிளப்பிய அவர் 6 பவுண்டரில7 சிக்சருடன் 83* (38) ரன்கள் குவித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் பிலிப்ஸ் சால்ட் 25* (21) ரன்கள் எடுத்ததால் 9.4 ஓவரிலேயே 117 ரன்கள் எடுத்த இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

அதனால் ரன் ரேட் அடிப்படையில் 2024 டி20 உலகக் கோப்பையின் செமி ஃபைனலுக்கு முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ள இங்கிலாந்து தங்களை நடப்பு சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது. அத்துடன் இப்போட்டியில் இங்கிலாந்து 62 பந்துகள் மீதும் வைத்து வென்றது. அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் அதிக பந்துகளை மீதம் வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற உலக சாதனையையும் இங்கிலாந்து படைத்துள்ளது.

இதையும் படிங்க: 5 பந்தில் 4 விக்கெட்ஸ்.. அமெரிக்காவை 115க்கு சுருட்டிய இங்கிலாந்துக்காக.. கிறிஸ் ஜோர்டான் 2 வரலாற்று சாதனை

இதற்கு முன் கடந்து 2007 டி20 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக கேப் டவுன் நகரில் ஆஸ்திரேலியா 58 பந்துகளை மீதம் வைத்து 10 விக்கெட் வித்யாசத்தில் வென்றதே முந்தைய சாதனையாகும். மறுபுறம் போராடாமலேயே தோற்ற அமெரிக்கா இத்தொடரில் இருந்து வெளியேறியது.

- Advertisement -