- Advertisement -
உலக கிரிக்கெட்

23 ரன்ஸ்.. ஆர்ச்சர் அபார கம்பேக்.. 8க்கு 8.. இங்கிலாந்திடம் வரலாறு தெரியாமல் சொதப்பிய பாகிஸ்தான் பரிதாப தோல்வி

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அங்கு 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி மே 25ஆம் தேதி எட்ஜ்பஸ்டன் நகரில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நடைபெற்றது.

அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 13 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் மற்றும் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய வில் ஜேக்ஸ் 37 (23) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இங்கிலாந்து வெற்றி:
அப்போது வந்த ஜானி பேர்ஸ்டோ தடுமாற்றமாக விளையாடி 21 (18) ரன்களில் சாகின் அப்ரிடி வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த ஹரி ப்ரூக் 1, மொய்ன் அலி 4 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜோஸ் பட்லர் அரை சதமடித்து 84 (51) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 12* (4) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் இங்கிலாந்து 183/7 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3, இமாத் வாசிம் 2, ஹரிஷ் ரவூப் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 184 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு முகமது ரிஸ்வான் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் தடுமாறிய சாய்ம் ஆயுப் 2 (7) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதனால் 14/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் பாபர் அசாம் மற்றும் பஃகார் ஜாமான் ஆகியோர் சரிவை சரி செய்யப் போராடினர். ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் கேப்டன் பாபர் அசாம் தடவலாக பேட்டிங் செய்து 32 (26) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது வந்த சடாப் கான் 3 (4), அசாம் கான் 10 (11) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் அதிரடி காட்டிய பக்கார் ஜமானும் 45 (21) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இப்திகார் அகமது 23 (17) இமாது வசிம் 22 (13) அதிரடியாக ரன்கள் எடுத்த போதிலும் ஃபினிஷிங் செய்ய தவறினர். அதன் காரணமாக 19.2 ஓவரில் 160 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட்டாகிய இங்கிலாந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறறு 1 – 0* (4) என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையும் படிங்க: பேட் கம்மின்ஸ் எடுத்த திடீர் முடிவு.. வெற்றிக்கு கைகொடுத்த பக்கா பிளான் – மைதானத்தில் நடந்தது என்ன?

அந்த அணிக்கு அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3, மொய்ன் அலி 2, ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். குறிப்பாக ஆர்ச்சர் காயத்திலிருந்து குணமடைந்து 12* ரன்கள், 2 விக்கெட்டுகள் எடுத்து அற்புதமான கம்பேக் கொடுத்துள்ளார். மறுபுறம் இப்போட்டியையும் சேர்த்து எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 8 சர்வதேச டி20 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வென்றுள்ளது. ஆனால் அதைக் கூட தெரியாமல் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசியது தோல்வியை கொடுத்தது.

- Advertisement -