ஜடேஜா அடித்த பந்தில் சென்னை அதிரடி வீரர் காயம் – வைரலாகும் வீடியோ

bravo

ஐபில் திருவிழா தொடங்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட பிராவோ காயம்.ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில் தொடக்க மற்றும் இறுதிப் போட்டியை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

dwayne

மொத்தம் 9 நகரங்களில் 51 நாட்களாக நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஏப்ரல்7ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளன.சென்னை அணி சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள உள்ளூர் லீக் ஆட்டத்தின் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை ஏப்ரல் 10ம் தேதி எதிர்கொள்கின்றது.

- Advertisement -

இரண்டாண்டு தடைக்கு பின் களமிறங்கவுள்ள சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மொத்தம் 7போட்டிகளில் விளையாடவுள்ளது . இரண்டாண்டு தடைக்கு பின்னர் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இந்தாண்டு ஐபிஎல்-இல் களம் காண்பதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் ஐபிஎல் நெருங்கி வருவதால் சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய பயிற்சியின் போது தோனியும், ஜடேஜாவும் பேட்டிங் செய்த போது பிராவோ வீசிய பந்தை ஜடேஜா அடிக்க அந்த பந்தை பிராவோ பிடிக்க முயற்சித்த போது பிராவோவின் மணிக்கட்டில் பட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக பிராவோவை உடைமாற்றிடும் அறைக்கு அழைத்துச்சென்ற மருத்துவர்கள் அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

- Advertisement -

பின்னர் பிராவோவிற்கு ஏற்பட்டது சாதாரண காயம் தான், விரைவில் குணமடைந்து விடுவார் என்று அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடங்க ஒரு வாரமே உள்ள நிலையில் தற்போது பிராவோவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Advertisement