- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியில் விளையாடிய போது எனக்கு இந்த சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது – டிராவிட் ஓபன் டாக்

ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 1996ஆம் ஆண்டு அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இந்த சதம் லார்ட்ஸ் மைதானத்தில் வந்தது தற்போது தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேசியுள்ளார் ராகுல் டிராவிட். ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியுள்ளார் அவர் கூறுகையில்…

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல கடுமையான காலகட்டங்களில் இருந்தன. 1998 ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் இருந்து காரணமில்லாமல் நீக்கப்பட்டேன். மீண்டும் ஒருநாள் அணிக்குள் நுழைய ஓராண்டு மிகக் கடுமையாக போராடினேன். ஏறக்குறைய ஒரு ஆண்டுகாலம் அணியில் இடம் இல்லாமல் தவித்தேன்.

- Advertisement -

அப்போதெல்லாம் நான் ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ற வீரன் தானா? என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். எப்போதும் டெஸ்ட் போட்டிகளுக்கான வீரராகவே இருக்க ஆசைப்பட்டேன். எனக்கு சிறு வயதிலிருந்தே அதற்கான பயிற்சி மட்டும்தான் கொடுக்கப்பட்டது.

பந்தை தூக்கி அடிக்க கூடாது தரையோடு தரையாகத் தான் அடிக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது. அதனால்தான் ஒருநாள் போட்டிகளுக்கு ஆட முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் அடிக்கடி வந்து கொண்டே இருந்தது. இந்திய கிரிக்கெட் வீரராக உருவாக்குவது அவ்வளவு எளிதாக எனக்கு இருந்துவிடவில்லை.

நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய போதெல்லாம் ஐபிஎல் தொடரில் இல்லை. ரஞ்சிப் போட்டியில் மட்டும் தான். அதிலும் ரஞ்சி போட்டிகளில் பெரிதாக வருமானம் இருக்காது. நான் படிப்பிலும் கோட்டை விட்டுவிட்டேன். நான் நினைத்து இருந்தால் அப்போது ஓரளவிற்கு படித்திருப்பேன். ஆனால் கிரிக்கெட் தான் என்னோட வாழ்க்கை என்று முடிவெடுத்து தற்போது இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

- Advertisement -
Published by