இன்னேரம் வேறு ஒருவராக இருந்தால் காணாமல் போயிருப்பாங்க – விராட் கோலியை பாராட்டும் முன்னாள் வீரர்

Virat Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புக்கு நிகராக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களை அடித்து நொறுக்குவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. ஏனெனில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் யானைக்கும் அடி சறுக்கும் என்ற வகையில் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறினார்.

- Advertisement -

ஆரம்ப காலங்களில் அபாரமாக செயல்பட்டு களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு தனக்கென்று தங்கமான தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவர் இடையிடையே 50, 70 போன்ற ரன்களை அடித்தாலும் அதை கண்டுகொள்ளாத சில முன்னாள் வீரர்கள் சதமடிக்கவில்லை என்பதற்காக அணியிலிருந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்தனர். இருப்பினும் அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து இடையிடையே ஓய்வெடுத்து சதமடிக்க போராடிய அவர் ஒரு மாதம் ஓய்வெடுத்து இந்த ஆசிய கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கினார்.

அதில் லீக் சுற்றில் 35, 59* என நல்ல ரன்களை அடித்து பார்முக்கு திரும்பி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய அவர் சூப்பர் 4 சுற்றிலும் 60, 0 என முடிந்தளவுக்கு நல்ல ரன்களை எடுத்து இதர பேட்ஸ்மேன்களை விட சிறப்பாக செயல்பட்டார். ஆனால் இதர வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறியதால் சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா பைனலுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

Virat Kohli

போராட்டத்துக்கு வெற்றி:
இருப்பினும் ரசிகர்களுக்கு ஒரே ஆறுதலாக அமையும் வகையில் பார்முக்கு திரும்பிய விராட் கோலி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் பழைய பன்னீர்செல்வமாக மாறி அதிரடியாக பேட்டிங் செய்து 12 பவுண்டரி 6 சிக்சர்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் சதமடித்து 122* (61) ரன்களை விளாசினார். அதனால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை அடித்த அவர் 1020 நாட்கள் கழித்து 3 வருடங்களாக அடம் பிடித்து வந்த தன்னுடைய 71வது சதத்தையும் விளாசி தன்னை தினந்தோறும் விமர்சித்தவர்களை கைதட்டி பாராட்ட வைத்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த ஆசிய கோப்பையை வெல்லா விட்டாலும் இந்திய பேட்டிங்கின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி பார்முக்கு திரும்பியதில் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்படி தன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்து பயிற்சிகளை எடுத்து விடாமுயற்சி செய்து போராடி வெற்றி கண்ட அவரை நிறைய முன்னாள் வீரர்கள் மனதார பாராட்டுகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் விராட் கோலியை தவிர்த்து இந்த இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நிச்சயம் அணியிலிருந்து காணாமல் போயிருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

Gambhir

அந்தளவுக்கு ஆரம்ப காலங்களில் ஏராளமான ரன்களையும் சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த காரணத்தாலேயே சுமாரான ஃபார்மிலும் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெற்று சாதித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முதலில் அவர் இந்த சதத்தை 3 வருடங்கள் கழித்துதான் அடித்துள்ளோம் 3 மாதங்கள் கழித்து அடிக்கவில்லை என்பதை உணர வேண்டும். 3 வருடங்கள் என்பது அதிகப்படியான காலமாகும். இதற்காக அவரை நான் விமர்சிக்கவில்லை. ஆனால் இந்த மோசமான காலத்திலும் தொடர்ச்சியான வாய்ப்பை பெறும் அளவுக்கு அவர் கடந்த காலங்களில் ஏராளமான ரன்களை குவித்துள்ளார்”

“அவரது இடத்தில் வேறு எந்த இளம் வீரராவது இருந்திருந்தால் 3 வருடங்கள் சதங்கள் அடிக்காமல் இருந்ததற்கு நிச்சயமாக சர்வதேச கிரிக்கெட்டில் தாக்குப்பிடித்திருக்க முடியாது. எனவே இந்த சதம் வந்திருக்க வேண்டிய நேரத்தில் சரியாக வந்துள்ளது. ஆனால் உண்மையைச் சொல்கிறேன் இவ்வளவு காலங்கள் சதமடிக்காமல் இருந்ததற்கு அவரை தவிர உலகில் வேறு யாருமே சர்வதேச கிரிக்கெட்டில் தாக்கு பிடித்திருந்திருக்க முடியாது” என்று கூறினார்.

Viart Kohli 122

பொதுவாகவே சிறப்பாக செயல்பட்டாலும் விராட் கோலியை விமர்சிக்கக் கூடிய கௌதம் கம்பீர் ஹாங்காங்க்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது சதமடித்து பார்முக்கு திரும்பியதால் அப்படியே யூ டர்ன் போட்டுள்ள அவர் விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் வழக்கம்போல விராட் கோலி 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement