- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அவர் லெஜெண்ட்.. பாபர் அசாம் மட்டுமல்ல யாரையும் கம்பேர் பண்ணாதீங்க.. பாக் ரசிகர்களை சாடிய ஷேஷாத்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அத்தொடரில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து போன்ற அணிகளை தோற்கடித்த இந்தியா ஃபைனலில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்று இந்தியா சாதனை படைத்தது.

அந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே அடித்து தடுமாறினார். ஆனால் மாபெரும் ஃபைனலில் 76 ரன்கள் விளாசி இந்தியாவை தாங்கிப்பிடித்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று தன்னை சாம்பியன் என்பதை நிரூபித்து ஓய்வு பெற்றார்.

- Advertisement -

நோ கம்பேரிஷன்:
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் பாபர் அசாமை இந்தியாவின் விராட் கோலியுடன் ஒப்பிடக்கூடாது என்று முன்னாள் வீரர் அஹ்மத் சேஷாத் தெரிவித்துள்ளார். சொல்லப்போனால் நவீன கிரிக்கெட்டில் விராட் கோலியை மற்ற வீரர்கள் யாருடனும் ஒப்பிடக்கூடாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி நம்முடைய தலைமுறையின் லெஜெண்ட்”

“அவர் டி20 கிரிக்கெட்டில் தன்னுடைய மரபை உருவாக்கி விட்டு விடை பெறுகிறார். அவர் எப்போதும் கிரிக்கெட்டை ஆர்வத்துடன் விளையாடினார். தன்னுடைய கடைசிப் போட்டியில் கூட யாரோ ஒருவர் விக்கெட்டை எடுத்த போது அவர் பவுண்டரி எல்லையிலிருந்து அதை கொண்டாடினார். அந்த உலகக்கோப்பை முழுவதும் அவர் ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் ஃபைனலில் யாருமே அடிக்காத போது விராட் கோலி அடித்தார்”

- Advertisement -

“அந்த ரன்களை அவர் அடிக்காமல் போயிருந்தால் இந்தியா வென்றிருக்காது. இந்தியா மட்டுமின்றி இதர உலகிற்கும் அவர் தன்னுடைய மரபை விட்டு சென்றுள்ளார். விராட் கோலியின் இடத்தை எந்த ஃபார்மட்டிலும் நிரப்புவது இந்தியாவுக்கு எளிதாக இருக்காது. அவருடைய இடத்தை நிரப்புவதற்காக இந்திய அணிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். விராட் கோலி போல இங்கே யாருமில்லை”

இதையும் படிங்க: முதல்ல நாட்டுப்பற்றை கத்துக்கோ.. அப்றம் இந்தியாவுக்கு விளையாடலாம்.. ரியான் பராக்கை விளாசிய ஸ்ரீசாந்த்

“ரசிகர்கள் அவரை பாபர் அசாமுடன் கூட ஒப்பிடக்கூடாது. சொல்லப்போனால் யாரையும் அவருடன் ஒப்பிடக்கூடாது. ஐசிசி தொடர்களில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சராசரி அற்புதமாக இருக்கிறது. எனவே யாரையும் அவருடன் ஒப்பிடக்கூடாது. இங்கே ஒரு விராட் கோலி மட்டுமே இருக்கிறார். கோப்பையை வென்று விடை பெறுவதற்கு அவர் தகுதியானவர். ஒரு வீரராக விராட் மற்றும் ரோஹித் ஆகியோர் இப்படியொரு வழி அனுப்புதலை பெற்றதற்கு தகுதியானவர்கள் என்று சொல்வேன்” என்று கூறினார்.

- Advertisement -