இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஐயர்லாந்து அணிகளுக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னனியில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் அடுத்த போட்டியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ராகுலுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கோலி மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இந்த தொடரின் 15 பேர் கொண்ட இந்திய அணி பட்டியலில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் கே எல் ராகுல் இடம்பெற்றிருந்தனர். ஆனால் நேற்று(ஜூன் 27) நடைபெற்ற போட்டியில் இவர்கள் இருவரும் ஆடும் இளவனில் இடம்பெறவில்லை. ஆனால், இந்த தொடரின் இரண்டாவது தொடரின் இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜூன் 29) நடக்கவுள்ளது. இதில் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பளிக்கபடும் என்று கோலி பேசியதில் இருந்து புலப்படுகிறது.
இந்த தொடரின் முதல் டி20 போட்டி நேற்று (ஜூன் 27 ) டப்லின் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ஐயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடியில் 132 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் கோலி கூறியதாவது ‘இந்த போட்டியில் குறை கூற ஒன்றும் இல்லை. தற்போதைய நிலவரப்படி ஒரு சில வீரர்களுக்கு இன்று நடைபெற்ற போட்டியில் வாய்பளிக்கபடாமல் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் அடுத்த போட்டியில் வாய்ப்பளிக்கபடும். அணி நிர்வாகம் அனைத்து வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது, அதனை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம்நேற்றைய போட்டியில் விளையாடாத கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் உட்பட சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.