பிராவோ கேட்ச் பிடித்ததும், பொல்லார்ட் முன்னாடி டான்ஸ் ஆடி வெறுப்பேற்றியுள்ளார்..! – வைரலாகும் வீடியோ

pollard

மேற்கிந்திய கிரிக்கெட் அணியில் உள்ள ஆல் ரௌண்டர்களில் பிராவோ ஒரு முக்கிய வீரராக இருப்பவர். வேக பந்து வீச்சாளரான பிராவோ பேட்டிங் மற்றும் பீல்ட்டிங்கில் கூட சிறப்பான ஆட்டக்காரராகவே திகழ்ந்து வருகிறார். அதே போல இவரது குறும்பு தனத்திற்கும் மிகவும் பெயர் போனவர்.
bravo
கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இணைந்து குளோபல் டி20 லீக் கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 6 அணிகள் பங்குபெற்றுள்ள இந்த தொடரில் சர்வேதேச வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் மேற்கிந்திய அணியின் பிராவோ வின்னிபேக் ஹாக் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதே போல மேற்கிந்திய அணியின் பொல்லார்ட் டொராண்டோ நேஷன் அணியில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடரின் 7 வது போட்டியில் வின்னிபேக் ஹாக் மற்றும் டொராண்டோ நேஷன் மோதிய போட்டியில் பிராவோ தலைமையான வின்னிபேக் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டொராண்டோ நேஷன் அணியில் விளையாடிய பொல்லார்ட் 25 ரன்கள் எடுத்திருந்த போது எட்டுவார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதனை கிண்டல் செய்யும் விதமாக வின்னிபேக் ஹாக் அணியில் விளையாடிய பிராவோ ,பொல்லார்ட் முன் சென்று ஆட்டம் போட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.