நீச்சல் உடையில் நடுக்கடலில் தினேஷ் கார்த்திக் மற்றும் அவரது தீபிகா – புகைப்படம் இதோ

Dipika

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இன்று வரை விளையாடி வருகிறார். அவர் 2007 ஆம் ஆண்டு நிகிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரை விவாகரத்து செய்தார்.

இரண்டாவதாக தீபிகா பல்லிகள் என்பவரை 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தீபிகா இந்திய அணிக்காக ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தீபிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் தினேஷ் கார்த்திக் உடன் இருக்கும் தீபிகா தினேஷ் கார்த்திகை பார்த்து 2 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த புகைப்படம்தான் எனக்கு ஆறுதலை தருகிறது என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும் இது பழப்புகைப்படமாக இருந்தாலும் இதனை கண்ட ரசிகர்கள் விராத் கோலி அனுஷ்கா சர்மார்விற்கு போட்டியாக இந்த ஜோடி இருக்கும் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.